Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஒரே ஒரு விஷயம் தான் செய்யனும்.. பின் கோலியை பிடிக்க முடியாது" ஆஸி,தொடர்.. ரவி சாஸ்திரி எச்சரிக்கை

நாக்பூர்: ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய நட்சத்திரம் விராட் கோலி ஒரே ஒரு விஷயத்தை செய்துவிட்டால், பின்னர் அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள இந்தியா - ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விரைவில் தொடங்கவுள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் பிப்ரவரி 9ம் தேதி தொடங்கவுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்திய அணி இந்த தொடரை 2 - 0 அல்லது 3 - 1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றே தீர வேண்டும்.

நம்பிக்கை தூண்

நம்பிக்கை தூண்

இந்திய அணியை பொறுத்தவரையில் மிடில் ஆர்டரில் தூண் போன்று இருந்த ரிஷப் பண்ட் விளையாடவில்லை. ஸ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் அனைவரின் பார்வையும் தற்போது விராட் கோலியின் மீது திரும்பியுள்ளது. ஏனென்றால் நல்ல ஃபார்மில் உள்ள விராட் கோலி தான் இந்த முறை இந்திய அணியை காப்பாற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

ரவி சாஸ்திரி விளக்கம்

ரவி சாஸ்திரி விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து ரவிசாஸ்திரி பேசியுள்ளார். அதில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விராட் கோலியின் ரெக்கார்ட் மிகச்சிறப்பாக உள்ளது. விராட் கோலி தற்போது இருக்கும் அதே ஃபார்முடன் சிறப்பான தொடக்கத்தை பெற வேண்டும். குறிப்பாக முதல் 2 இன்னிங்ஸ்களுமே அவருக்கு முக்கியம். அந்த இரண்டிலுமே கோலியால் அதிக ஸ்கோர் அடிக்க முடிந்துவிட்டால், அதன்பின்னர் ஆஸ்திரேலியாவை விழிப்பிதுங்க செய்துவிடுவார்.

 ஆஸ்திரேலியாவின் திட்டம்

ஆஸ்திரேலியாவின் திட்டம்

ஆஸ்திரேலிய அணியின் முதற்கட்ட திட்டம், விராட் கோலியை நல்ல தொடக்கம் பெற விடாமல் இருப்பது தான். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விராட் கோலி சராசரியாக 50 ரன்கள் அடிக்கிறார். இதனால் இந்த தொடரில் சுவாரஸ்யமான போட்டியை காணலாம் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

கோலிக்கு உள்ள சிக்கல்

கோலிக்கு உள்ள சிக்கல்

கடந்த 2022ம் ஆண்டு கம்பேக் கொடுத்த விராட் கோலி தற்போது வரை ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சதமடித்துவிட்டார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அவர் இன்னும் பழைய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதுமட்டுமல்லாமல் ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிகம் தடுமாறுவதால், இந்த முறை கோலிக்கும் கடும் சவால் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன் கோலிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்.

லியோனின் ஸ்பெஷலிஸ்ட்

லியோனின் ஸ்பெஷலிஸ்ட்

இந்திய மண்ணில் இதுவரை நாதன் லியோன் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 4 முறை விராட் கோலி அவுட்டாகியுள்ளார். அவரால் வெறும் 93 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்துள்ளது. இதே போல சட்டீஸ்வர் புஜாரா நாதனுக்கு எதிராக 176 ரன்களை அடித்துள்ள போதும் 5 முறை விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இதனால் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் மிகவும் உஷாராக விளையாட வேண்டியுள்ளது.

Story first published: Tuesday, February 7, 2023, 17:43 [IST]
Other articles published on Feb 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+