Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அத மட்டும் மாத்திக்காதீங்க” .. ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு உள்ள வாய்ப்பு.. ரவி சாஸ்திரி அட்வைஸ்!

அமீரகம்: இந்திய அணி ஆசிய கோப்பை தொடரை வெல்வதற்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முக்கிய அறிவுரையை கொடுத்துள்ளார்.

Recommended Video

Vinod Kambli-க்கு கிடைத்த Job Offer! உதவி செய்த Maharasthra Businessman | *Cricket

பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆசிய கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் அமீரகத்திற்கு சென்றடைந்துள்ளனர்.

 இந்திய அணி

இந்திய அணி

ரோகித் சர்மா தலைமையிலான இந்த முறை புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தனது முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்ட வேண்டும் என்றும் இந்தியாவின் செயல்பாடு இனி ஆக்ரோஷமானதாக தான் இருக்கும் எனவும் ரோகித் சர்மா அறிவித்தார். அதன்படி தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் செயல்பட்டனர்.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

இதுபோன்று அதிரடியாக விளையாடுவதினால் தொடர்ச்சியாக விக்கெட்கள் சரிந்து சொதப்புவதற்கு வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதே போல செயல்பாட்டை தான் வெஸ்ட் இண்டீஸ் அணி வழக்கமாக செயல்படுத்தும். ஆனால் பலமுறை அவர்கள் சொதப்பியுள்ளனர். இதனால் ஆசிய கோப்பையில் என்ன ஆகப்போகிறது என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

ரவிசாஸ்திரி ஐடியா

ரவிசாஸ்திரி ஐடியா

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேசியுள்ளார். அதில்,

இந்தியா தனது அணுகுமுறையை மாற்றக்கூடாது. நான் பயிற்சியாளராக இருந்த போதும், அதிரடி காட்ட வேண்டும் என்று தான் திட்டமிட்டு வந்தோம். சில போட்டிகளில் தோற்கலாம். ஆனால் இந்த அணுகுமுறையில் வெற்றி பெற்றுவிட்டால், பெரிய தொடர்களில் இதே திட்டத்தை செயல்படுத்தலாம்.

கோலியால் முடியுமா?

கோலியால் முடியுமா?

ஓய்வில் இருந்து வந்துள்ள கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரும் அதிரடி காட்ட முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ரவிசாஸ்திரி, ஏன் அவர்களால் முடியாது. அவர்கள் இருவரும் ஐபிஎல் மற்றும் டி20ல் அதிக அனுபவம் உள்ளவர்கள். இதில் சிறிய மாற்றத்தை செய்வது அவர்களுக்கு கடினமான ஒன்றாக இருக்காது. இதனால் நல்ல ஸ்கோர் கிடைக்கும் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்

Story first published: Wednesday, August 24, 2022, 16:05 [IST]
Other articles published on Aug 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+