“ஹர்திக் பாண்ட்யாவை டீம்ல சேர்க்காதீங்க.. ரொம்ப ரிஸ்க்” ரவிசாஸ்திரி கடும் எச்சரிக்கை.. காரணம் என்ன?
மும்பை: ஹர்திக் பாண்ட்யாவை அணியில் சேர்க்கக் கூடாது என முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
ஐபிஎல் தொடர் முடிவடைந்ததை அடுத்து கிரிகெட் ரசிகர்களின் பார்வை இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர் மீது திரும்பியுள்ளது.
இரு அணிகளும் வரும் ஜூன் 9ம் தேதி முதல் ஜூன் 19ம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இந்திய அணி
இதற்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ், ஜடேஜா உள்ளிட்ட பலர் இல்லை. கே.எல்.ராகுல் தலைமையில் இளம் படை களம் காணுகிறது. இந்த அணியின் பேட்டிங் தூணாக தற்போது ஹர்திக் பாண்ட்யா தான் பார்க்கப்படுகிறார்.

சிறப்பான கம்பேக்
காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த ஹர்திக் பாண்ட்யா, ஐபிஎல் தொடரில் நல்ல கம்பேக் கொடுத்துள்ளார். 15 போட்டிகளில் 487 ரன்களை குவித்துள்ளார். இதே போல பவுலிங்கிலும் 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இவரின் பேட்டிங் சிறப்பாக இருந்ததால் டி20 உலகக்கோப்பையில் நிச்சயம் இருப்பார் எனத் தெரிகிறது.

ரவிசாஸ்திரியின் எச்சரிக்கை
இந்நிலையில் பாண்ட்யாவை நம்பக்கூடாது என ரவிசாஸ்திரி கூறியுள்ளார். அதில், இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா ஒரு பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டுள்ளாரா, அல்லது ஆல்ரவுண்டரா என்பது தெரியவில்லை. ஆனால் 2 ஓவர்களை கூட வீச முடியாத அளவிற்கு அவருக்கு காயம் இல்லை. எனவே அவர் 2 வீரர்களின் செயல்களை செய்ய முடியும். ஆனால் அதை டி20 கிரிக்கெட்டில் மட்டும் உபயோகிக்க வேண்டும்.

ரிஸ்க் எடுக்க வேண்டாம்
டி20 கிரிக்கெட்டில் மட்டும் ஹர்திக் பாண்ட்யாவை பயன்படுத்தினால் மட்டுமே டி20 உலகக்கோப்பையில் அவர் உதவுவார். தேவையின்றி ஒருநாள் கிரிக்கெட்டில் பாண்ட்யாவை பயன்படுத்தி பார்க்காதீர்கள். அது மிகப்பெரிய ரிஸ்க்காக அமைந்துவிடும். பவுலிங் அழுத்தத்தால் மீண்டும் எதுவேண்டாலும் நடக்கலாம். எனவே ஒரே ஃபார்மெட்டில் அவரை தொடர்ந்து பயன்படுத்துங்கள், நல்ல பலன் கிடைக்கும் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications