Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“முதல் போட்டியிலேயே அது நடக்கும்”.. விராட் கோலியின் கம்பேக்.. உணர்ச்சிவசப்பட்ட ரவிசாஸ்திரி!

மும்பை: ஆசிய கோப்பையில் விராட் கோலி கம்பேக் கொடுப்பது குறித்து அவருக்கு மிகவும் நெருக்கமான ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

Recommended Video

Rahul Dravid-க்கு Corona! Asia Cup-ல் India-வுக்கு பெரும் அடி | Aanee's Appeal | *Cricket

வரும் ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கவுள்ள ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்திய அணியில் தற்போது அனைவரின் கவனமும் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு வருவாரா என்பதிலேயே தான் உள்ளது.

 விராட் கோலி கம்பேக்

விராட் கோலி கம்பேக்

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்காமல் விராட் கோலி 1000 நாட்களை தாண்டி விளையாடி வருகிறார். நீண்ட ஓய்வு கிடைத்தால் புத்துணர்ச்சியுடன் விளையாடுவார் என முதலில் கூறியது முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான். அதன்படியே கோலியும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடர்களை புறகணித்து குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டுள்ளார். எனவே அவர் கம்பேக் தருவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ரவிசாஸ்திரி விளக்கம்

ரவிசாஸ்திரி விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் கோலியிடம் பேசவே இல்லை. ஏனென்றால் இது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் கிடையாது. பெரிய வீரர்களுக்கு சற்று ஓய்வு கிடைத்தாலே தவறு தெரிந்துவிடும். உலகில் எந்த வீரரும் கடினமான சூழல்களை எதிர்கொண்டது இல்லை என்று கூறவே முடியாது. மன நிம்மதி என்பது ஓய்வின் மூலமே கிடைக்கும். அது தற்போது கோலிக்கு கிடைத்துள்ளது.

 வாய் மூடிவிடும்

வாய் மூடிவிடும்

கோலியின் மனதில் இருந்த அனைத்து பிரச்சினைகளும் அடங்கிவிட்டன. எனவே மிகவும் நிதானமான மனநிலையுடன் கம்பேக் கொடுப்பார். ஆசிய கோப்பையின் முதல் போட்டியிலேயே கோலி அரைசதம் அடித்துவிட்டால், அதன்பின் தொடர் முழுவதும் அனைவரின் வாய்களும் மூடிவிடும். ரசிகர்களின் நியாபகம் மிகவும் குறைவு. மோசமான நாட்களை மறந்துவிட்டு, நிச்சயம் கோலிக்கு ஆதரவு கொடுப்பார்கள் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

முதல் வாய்ப்பு

முதல் வாய்ப்பு

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியாக வரும் ஆகஸ்ட் 28ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. பாகிஸ்தானுடன் வழக்கமாக சிறப்பாக விளையாடும் விராட் கோலி, இந்த முறை அந்த அணிக்கு எதிராகவே கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Story first published: Tuesday, August 23, 2022, 16:51 [IST]
Other articles published on Aug 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+