For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இதென்னா புதுசா இருக்கு” 2 உலகக்கோப்பைகளை இந்தியா தவறவிட காரணம் என்ன?.. உண்மையை உடைத்த ரவிசாஸ்திரி

ட்ரினிடாட்: இந்திய அணி 2 உலகக்கோப்பைகளை தவறவிட்டதற்கு ஹர்திக் பாண்ட்யாவும் காரணம் என முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது.

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் நவம்பர் மாதம் வருவதால், அதற்கு தயாராகும் வகையில் இந்திய அணியின் திட்டங்கள் அமைந்து வருகிறது.

இந்தியாவின் கனவு

இந்தியாவின் கனவு

இந்நிலையில் இந்திய அணியில் டி20 உலகக்கோப்பை கனவு குறித்து ரவிசாஸ்திரி பேசியுள்ளார். ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த போது, ஆஸ்திரேலிய டெஸ்ட் வெற்றி, உலகின் நம்.1 டெஸ்ட் அணி உள்ளிட்ட பல பெருமைகள் இந்திய அணிக்கு கிடைத்தன. ஆனால் பெரும் குறை என்னவென்றால் உலகக்கோப்பையை வென்றிட தவறியது தான். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டியில் தோல்வி, 2019 உலகக்கோப்பையில் அரையிறுதியுடன் வெளியேறியது. கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையில் லீக் சுற்றிலேயே வெளியேறியது.

தோல்விகளுக்கான காரணம்

தோல்விகளுக்கான காரணம்

இந்த தோல்விகளுக்கான காரணத்தை அவர் தற்போது பகிர்ந்துள்ளார். அதில் நான் எப்போதுமே அணியின் ப்ளேயிங் 11ல் டாப் 6 இடங்களில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் இருக்க வேண்டும் என நினைப்பேன். அப்படி ஒருவர் இல்லாதது தான் 2 உலகக்கோப்பைகள் இந்தியாவிடம் இருந்து பறிபோனது. ஹர்திக் பாண்ட்யா தான் எங்களின் பெரிய நம்பிக்கையாக டாப் 6 வரிசையில் பந்துவீசினார். ஆனால் அவரும் காயத்தினால் வெளியேறிவிட்டார்.

நான் அப்போதே கூறினேன்

நான் அப்போதே கூறினேன்

இந்திய அணியின் தேர்வுக்குழு அதிகாரிகளிடம், ஹர்திக் பாண்ட்யாவை போன்று ஒரு வீரரை கண்டுபிடியுங்கள், உலகக்கோப்பைக்கு தேவை என நான் அப்போதே கூறினேன். ஆனால் அதன்பின்னர் யாருமே கிடைக்கவில்லை. அப்படி ஒருவர் இருந்திருந்தால் இந்நேரம் உலகக்கோப்பைகளை வென்றிருக்க வாய்ப்புகள் உள்ளது என சாஸ்திரி கூறினார்.

இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்

இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்

கடந்த 2 ஆண்டுகளாக காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஹர்திக் பாண்ட்யா, தற்போது டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார். இதனால் இந்தாண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பையை வெல்ல ஹர்திக் பாண்ட்யாவின் உதவி மிகப்பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, July 25, 2022, 17:51 [IST]
Other articles published on Jul 25, 2022
English summary
Ravi Shastri reason for world cup lose ( உலகக்கோப்பையில் தோற்றது குறித்து ரவிசாஸ்திரி பேச்சு ) இந்திய அணி 2 முறை உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேசியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+