மத்தவங்கள விட அவரு நல்லா பேசுனாரு…! அதனால கோச்சாக்கிட்டோம்..!! தேர்வு குறித்து கபில் கலக்கல் பதில்
Recommended Video
மும்பை: ரவி சாஸ்திரியின் பேச்சுத்திறன் நன்றாக இருப்பதால் அவர் மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் என்று கபில்தேவ் கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே இருப்பார் என்று தேர்வுக்குழுத் தலைவர் கபில் தேவ் அறிவித்துள்ளார். இதையடுத்து வரும் 2021ம் ஆண்டு வரையில் ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக இருப்பார்.
பயிற்சியாளர் போட்டியில் சாஸ்திரியுடன் மைக் ஹசன், ராபின் சிங், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத் ஆகியோரும் போட்டியில் இருந்தனர். ஆனால், கிரிக்கெட் குறித்த அறிவு, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஆச்சர்ய விளக்கங்கள்
இது குறித்து கபில்தேவ் சொன்ன விளக்கங்கள் தான் ஆச்சர்ய ரகம். கேப்டன் கோலி விரும்புகிறார் என்பதற்காக ரவி சாஸ்திரியை மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கவில்லை, அவரது மொழிப்பரிமாற்றத் திறன் மற்றவர்களை விட சிறப்பாக உள்ளதே மீண்டும் அவர் நியமிக்கப்பட்டதற்கு காரணம் என்று கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

கபில் பதில்கள்
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு: கோலி செல்வாக்கினால் தேர்வு செய்யப்படவே இல்லை. கோலியின் கருத்தை கேட்க வேண்டுமெனில் ஒட்டுமொத்த அணியையுமே கேட்க வேண்டும். நாங்கள் யாரையும் கேட்கவில்லை. அதற்கு இங்கு இடமில்லை என்றார்.

நீக்க முடியுமா என கேள்வி
2015, 2019 உலக கோப்பை தொடர்களில் அரையிறுதியுடன் இந்தியா இவரது பயிற்சி காலத்தில் தான் வெளியேறி உள்ளதே என்ற கேள்விக்கு, உலக கோப்பை வெல்லவில்லை என்பதற்காக எந்த அணியின் மேலாளர், பயிற்சியாளரை நீக்க முடியுமா?

முடிவு எடுத்தோம்
அவர்களை நீக்க வேண்டுமா? ஒட்டுமொத்தமாக நீங்கள் பார்க்க வேண்டும். அவர் எங்களிடம் எப்படி விஷயங்களை அளித்தார் என்பதை வைத்தே முடிவு எடுத்தோம் என்றார் கபில்தேவ்.

மதிப்பெண் அளித்தோம்
நேர்காணல் செய்த அனைவருமே டாப்கிளாஸ்தான். ஆனால் ரவி சாஸ்திரியிடம் நல்ல கம்யூனிகேஷன் திறமைகள் இருப்பதாக கருதுகிறேன். நேர்காணலில் அவர் தொகுத்தளித்த விதங்களை வைத்து மதிப்பெண் வழங்கி தேர்வு செய்து இருக்கிறோம் என்றார் கபில்தேவ்.


Click it and Unblock the Notifications