Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியின் புதிய முயற்சி.. நம்பிக்கை கொடுத்த ரவி சாஸ்திரி.. கிரிக்கெட் வரலாற்றில் இது முதல்முறை!

மும்பை: எதிர்காலத்தில் இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்கும் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் தற்போது அதிகளவில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் போல் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான முதல் போட்டியிலேயே வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்.

உதாரணத்திற்கு சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கூட சூர்யகுமார் யாதவ் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் தங்களது முதல் சர்வதேச போட்டியிலேயே அரைசதம் விளாசினர்.

பிசிசிஐ முயற்சி

பிசிசிஐ முயற்சி

இது போன்ற வாய்ப்புகளை தொடர்ந்து வழங்க பிசிசிஐ புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. இந்திய அணி அடுத்ததாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

2 இந்திய அணிகள்

2 இந்திய அணிகள்

இங்கிலாந்து தொடரில் இந்தியாவின் சீனியர் வீரர்கள் பங்கேற்கின்றனர். அதே போல ஐபிஎல் தொடரில் கலக்கிய வீரர்களை கொண்டு இந்தியாவின் 2வது அணி உருவாக்கப்படவுள்ளது. இந்த அணி ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு 3 ஒருநாள் மட்டும் 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளது. 2 இந்திய அணிகள் உருவாக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதுவே நீடிக்கலாம்

இதுவே நீடிக்கலாம்

இந்நிலையில் அது நிரந்தரமாக இருக்கலாம் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், தற்போது நிலவும் கொரோனா பயோ பபுள், விமான பயணங்களால் பிசிசிஐ இந்த திட்டத்தை வகுத்துள்ளது. டி20 போட்டிகளை விரிவுப்படுத்த வேண்டும் என்றால் இதனை தொடர்ந்து செயல்படுத்தலாம்.

சாஸ்திரி விளக்கம்

சாஸ்திரி விளக்கம்

இந்தியாவில் தேவைக்கு அதிகமான அளவில் சிறந்த வீரர்கள் உள்ளனர். டி20 போட்டிகளை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும் எனக்கருதினால் தாரளமாக இந்த திட்டத்தை கையில் எடுக்கலாம். ஒலிம்பிக் போன்ற தொடர்களில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால், பல்வேறு நாடுகள் பங்கேற்கும். அதற்கு இது ஒரு முன்னெடுப்பாக இருக்கும் எனத்தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, June 2, 2021, 22:36 [IST]
Other articles published on Jun 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+