Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'சப்பாத்தி அடி' சாஸ்திரி.. ரவி சாஸ்திரியை இப்படி அழைப்பது ஏன் தெரியுமா?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் சப்பாத்தி அடிக்கு பெயர் போனவர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே கடந்த ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அந்த நியமனத்தின் போதிலிருந்தே கும்ப்ளேவுக்கும், கோஹ்லிக்கும் ஒத்து போகவில்லை.

இதைத் தொடர்ந்து லண்டனில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியுடன் கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இந்திய அணியின் தலைமை கோச் பதவிக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றது.

நேர்காணல்

நேர்காணல்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் நேற்றுமுன்தினம் இந்திய கிரிக்கெட் அறிவுரை குழு தேர்வு நடத்தியது. இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லியுடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்று அந்த குழுவின் உறுப்பினர் கங்குலி தெரிவித்தார்.

இன்று அறிவிப்பு

இன்று அறிவிப்பு

இதைத் தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரரான அவர் ஒரு ஆல்-ரவுண்டர் ஆவார். மேலும் வலதுகை பேட்டிங்கும், இடது கை சுழல் பந்தும் வீசுவார்.

மும்பையில் பிறந்தார்

மும்பையில் பிறந்தார்

மும்பையில் கடந்த 1962-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி பிறந்த அவரது முழு பெயர் ரவிசங்கர் ஜெயதிரிதா சாஸ்திரி. 18 வயதில் சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து 12 ஆண்டுகள் வரை நீடித்தார். அவர் ஆரம்பத்தில் பந்து வீச்சாளாராக பயணத்தை ஆரம்பித்தார். ஆனால் படிப்படியாக பேட்ஸ்மேனாக உருவாகி, அதிகத் திறமையுடனும் பந்தும் வீசக்கூடியவராகவும் உருவெடுத்தார்.

சாப்பாத்தி அடி

சாப்பாத்தி அடி

அவரது பேட்டிங் ஸ்டைலை சப்பாத்தி அடி என கூறுவார்கள். மணிக்கட்டை சுழற்றி ஆடுவது அவரது அடையாளமாக இருந்தது. இதனால் அவர் சுழற்பந்து வீச்சுகளை திறமையாக கையாண்டார். பெரும்பாலும் சாஸ்திரி தொடக்க ஆட்டக்காரராகவோ அல்லது நடுநிலை வரிசையிலோ களம் இறங்குவார்.

சாதனையை சமன் செய்தார்

சாதனையை சமன் செய்தார்

1985- ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் கிரிக்கெட்டின் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸில் தேர்வானது முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்த மேற்கு இந்தியரான கேரி சோபரின் சாதனையை அதே காலகட்டத்தில் சாஸ்திரி சமன் செய்தார்.

Story first published: Wednesday, July 12, 2017, 8:50 [IST]
Other articles published on Jul 12, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+