For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவ்வளவு தான்.. ஒண்ணும் பண்ண முடியாது…!! இந்திய அணியின் கோச் இவரு தான்..!! ரசிகர்கள் தெறி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியையே மீண்டும் நியமிக்கலாம் என கிரிக்கெட் ஆலோசனைக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், இங்கிலாந்து உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் மற்றும் பீல்டிங் கோச் ஸ்ரீதர் உள்ளிட்டோரின் பதவிக்காலமும் முடிவடைந்தது.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடர் நடைபெற்று வருவதால், ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களின் பதவிக்காலம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. புதிய பயிற்சி யாளர்களுக்கான அறிவிக்கையும் வெளியிடப்பட்டு, அதற்கான காலக் கெடுவும் முடிந்தது.

தொடர்களை வென்றது

தொடர்களை வென்றது

ரவி சாஸ்திரி, 2017ம் ஆண்டு செப்டம்பர் முதல், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். அவரது தலைமையில், இந்திய அணி டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது. 2018ம் ஆண்டில் ஆசிய கோப்பை உள்ளிட்ட தொடர்களை இந்தியா வென்றுள்ளது.

தோல்வியால் ஏமாற்றம்

தோல்வியால் ஏமாற்றம்

ரவி சாஸ்திரி பயிற்சியில் இந்திய கிரிக்கெட் அணி 70 சதவீதத்துக்கு மேல் வெற்றிகளை குவித்துள்ளது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக கோப்பையில் அரையிறுதியில் தோற்று வெளியேறியது. அந்த தோல்வி பெரும் விமர்சனங்களை எழுப்பியது.

கிரிக்கெட் ஆலோசனை குழு

கிரிக்கெட் ஆலோசனை குழு

இந் நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய நியமிக்கப்பட்ட கிரிக்கெட் ஆலோசனை குழு எந்தவொரு வெளிநாட்டினரையும் தேர்ந்தெடுக்க முகாந்தரம் இல்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது போன்ற சூழ்நிலையில், ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சி யாளராக்கப்படுவார் என்று தெரிகிறது.

ஆர்வமாக இல்லை

ஆர்வமாக இல்லை

இது குறித்து கிரிக்கெட் ஆலோசனை குழு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: ரவி சாஸ்திரி தலைமையில் அணி சிறப்பாக செயல்படுகிறது. எனவே, வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிக்க ஆர்வமாக இல்லை.

கிரிஸ்டனுக்கு முன்னுரிமை

கிரிஸ்டனுக்கு முன்னுரிமை

ஆனால் கேரி கிர்ஸ்டன் போன்ற ஒருவர் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தால் கருத்தில் கொண்டிருப்போம். எங்களை பொறுத்த வரை எப்பொழுதும் இந்திய பயிற்சியாளர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்போம்.

வாய்ப்புகள் அதிகம்

வாய்ப்புகள் அதிகம்

தற்போது ரவி சாஸ்திரி மேற்பார்வையில் அணி சிறப்பாக செயல்படும் போது, மாற்றத்தைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்? எனவே, அவரே மீண்டும் தொடருவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்றனர்.

மாற்றத்தை நோக்கி

மாற்றத்தை நோக்கி

பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்த கருத்து முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதாவது, ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தொடர வேண்டியது அவசியம். ஏனெனில் அணி ஒரு மாற்றத்தை நோக்கி செல்கிறது என்று கூறியிருந்தார்.

Story first published: Tuesday, August 6, 2019, 22:39 [IST]
Other articles published on Aug 6, 2019
English summary
Ravi shastri may retain as Indian team new coach, sources said.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+