Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரவி சாஸ்திரிக்கு மூன்று மாத ஊதியத்தை ஒன்றாக வழங்கிய பிசிசிஐ... எவ்வளவு தெரியுமா?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை கோச்சாக நியமிக்கப்பட்ட ரவி சாஸ்திரிக்கு மூன்று மாத ஊதியமாக ரூ.1.20 கோடி பிசிசிஐ வழங்கியது.

இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார். அவரது பணிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில் அவருக்கு பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.

Ravi Shastri paid Rs 1.2 crore for 3 months

இதைத் தொடர்ந்து கேப்டன் விராத் கோஹ்லிக்கும், ரவி சாஸ்திரிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்ததால் பதவி நீட்டிப்பை ஏற்க விரும்பாமல் அனில் கும்ப்ளே பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து இந்திய அணியின் தலைமை கோச் பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் கடந்த முறை கைநழுவிய அந்த வாய்ப்பு ரவி சாஸ்திரிக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் மூன்று மாத ஊதியமாக ரூ.1.20 கோடி பெற்றுள்ளார். இதேபோல் வெளிநாட்டு தொடரில் விளையாடியதற்காக வருவாய்ப் பகிர்வு அடிப்படையில், அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் டோணிக்கு ரூ.57.88 லட்சம் ஊதியமாக வழங்கப்பட்டு உள்ளது. விஜய் ஹஸாரே மற்றும் ராஞ்சி டிராபியில் பங்களித்ததற்காக ரவி சாஸ்திரிக்கு ரூ.69 லட்சமும், டோணிக்கு ரூ. 57 லட்சமும் வழங்கியது பிசிசிஐ.

Story first published: Thursday, October 5, 2017, 14:05 [IST]
Other articles published on Oct 5, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+