Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி.. முக்கிய வீரரை கழற்றிவிட்ட ரவி சாஸ்த்ரி.. வீரர்கள் பட்டியல் இதோ

மும்பை : ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பங்கேற்ற ரவி சாஸ்திரி எந்தெந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ரவி சாஸ்திரி முக்கியமான வீரராக கருதப்படும் கேஎல் ராகுலை அதிரடியாக நீக்கினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அணியை தற்போது பார்க்கலாம்.ரவி சாஸ்திரி தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவையும் கில்லையும் தேர்வு செய்திருக்கிறார்.

Ravi shastri picks the 15 member india squad for asia cup 2023

மூன்றாவது வீரராக விராட் கோலியை குறிப்பிட்டுள்ள ரவி சாஸ்திரி விக்கெட் கீப்பராக இசான் கிஷனை தேர்வு செய்திருக்கிறார். மேலும் ஐந்தாவது வீரராக இளம் நட்சத்திர வீரர் திலக் வர்மாவுக்கு ரவி சாஸ்திரி வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதை போன்று ஆறாவது வீரராக சூரியகுமார் யாதவையும், 7வது வீரராக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவையும் ரவி சாஸ்திரி தனது அணியில் தேர்வு செய்து இருக்கிறார்.

சுழற் பந்துவீச்சாளராக ஜடேஜா,அக்சர் பட்டேல், சாகல் மற்றும் குல்தீப் யாதவ் என நான்கு வீரர்களை தேர்வு செய்துள்ள ரவி சாஸ்திரி வேகப்பந்துவீச்சாளராக சமி, சிராஜ், பும்ரா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரை தேர்வு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை ரவி சாஸ்திரி தனது அருகில் சேர்க்கவில்லை.

இதற்கு விளக்கம் அளித்துள்ள ரவி சாஸ்திரி ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடரில் வீரர்கள் விளையாடும் போது அதிக அழுத்தம் ஏற்படும்.கே எல் ராகுல் தற்போது தான் காயத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும் நபரை நீ விக்கெட் கீப்பிங் செய், பேட்டிங் செய் என்று ஆசிய கோப்பை போன்ற தொடரில் இறக்கி விட்டால் அது நிச்சயம் அவருடைய ஆட்டத் திறனை பாதிக்கும்.

மேலும் ஸ்ரேயாஸ் ஐயரும், கே எல் ராகுலும் பல மாதங்களாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. இப்படி இருக்கும் பட்சத்தில் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் ஆட்டத்தை அவர்களை விளையாட வைத்தால் எப்படி அவர்கள் ரன் சேர்ப்பார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Story first published: Friday, August 18, 2023, 14:17 [IST]
Other articles published on Aug 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+