Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷாரூக், ரவீனாவுடன் போஸ் கொடுத்த ரவி சாஸ்திரி... வாழ்த்து தெரிவித்த மைக்கேல் வாகன்

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாரூக்கான் மற்றும் ரவீனா டண்டனுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல தொழிலதிபர் கவுதம் சிங்கானியாவும் இடம்பெற்றிருந்த இந்த கூட்டணியின் புகைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளை அளித்து வருகின்றனர்.

இதனிடையே, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ரவிசாஸ்திரியின் இந்த பதிவின்கீழ் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் அணியின் தலைமை கோச்

கிரிக்கெட் அணியின் தலைமை கோச்

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ரவி சாஸ்திரி, தன்னுடைய காலத்தில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி வெற்றி வீரராக திகழ்ந்தவர். இவர் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தொடர்ந்து வருகிறார்.

வெற்றிகளை குவிக்கும் இந்திய அணி

வெற்றிகளை குவிக்கும் இந்திய அணி

இவரின் தலைமையின்கீழ் கடந்த 2017ல் சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் உலக கோப்பை 2019ல் அரையிறுதி வரை முன்னேற்றம் என இந்திய அணி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவு

இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவு

மகாராஷ்டிராவில் உள்ள அலிபாக்கில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரவிசாஸ்திரி தன்னுடன் அங்கு கொண்டாட்டத்தில் பங்கேற்ற நடிகர்கள் ஷாரூக்கான், ரவீனா டண்டன் மற்றும் தொழிலதிபர் கவுதம் சிங்கானியா ஆகியோருடன் இணைந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"புத்திசாலிகளுடன் உரையாடல்"

அந்த புகைப்படத்தின் கீழ் அலிபாக் ஒரு சொர்க்கம் என்று குறிப்பிட்டுள்ள ரவி சாஸ்திரி, அங்கு புத்திசாலிகளான ஷாரூக்கான், ரவீனா மற்றும் கவுதம் ஆகியோருடன் சிறப்பான உரையாடல் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாழ்த்து

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாழ்த்து

ரவி சாஸ்திரியின் இந்த புகைப்படத்திற்கு ஏராளமானோர் தங்களது கமெண்ட்டுகளை கூறிவரும் நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

Story first published: Tuesday, December 31, 2019, 15:45 [IST]
Other articles published on Dec 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+