Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பந்துவீச்சு மோசம்.. ! முகமது ஷமியை ஏன் சேர்க்கல ? ரோகித், டிராவிட் மீது ரவி சாஸ்த்ரி கடும் தாக்கு

மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி எடுத்த யுத்திகள் மோசமாக இருந்ததாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

Recommended Video

IND vs AFG Virat Kohli-ன் அசுரத்தனமான ஆட்டம்! அபார சதம் *Cricket

டி20 உலக கோப்பை தொடருக்கு முன்மாதிரியாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்திய அணி சூப்பர் ஃபோர் சுற்றுகளில் படுதோல்வியை சந்தித்து ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

இந்திய அணியின் பந்துவீச்சு மிக மோசமாக இருப்பதாக ரசிகர்களும் விமர்சகர்களும் குற்றச்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முகமது சாமியை அணியில் சேர்க்காதது குறித்து கேள்வி எழுப்பினார் .

அதிர்ச்சி அடைந்தேன்

அதிர்ச்சி அடைந்தேன்

முகமது ஷமி, இந்திய அணியில் விளையாடாமல் அணி நிர்வாகம் மற்றும் தேர்வு குழுவினரால் ஓரங்கட்டப்பட்டிருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாக கூறியுள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சு இம்முறை சிறப்பாக இல்லை. அப்படி இருக்க முகமது ஷமியை அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும் என்றும் ரவி சாஸ்திரி கூறினார். ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி வெறும் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் வந்திருந்ததை கண்டு தாம் அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் கூறினார்.

தவறு செய்துவிட்டார்கள்

தவறு செய்துவிட்டார்கள்

முகமது ஷமி போன்ற ஒரு வீரர் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவரை இந்திய அணியில் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கிறேன் என்ற பெயரில் அவர்கள் சிறப்பாக விளையாடும் போது அவர்களை அணியை விட்டு அனுப்பி தேர்வு குழுவினர் தவறு செய்வதாகவும் ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார் .

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

கடந்த டி20 உலக கோப்பையில் பனிப்பொழிவு எவ்வாறு ஆட்டத்தை பாதித்தது என்பதை நாம் பார்த்தோம்.சுழற் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை.குஜராத் அணிக்காக நடப்பாண்டில் முகமது ஷமி சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இதனால் தேர்வு குழுவினர் அவரை அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி குற்றம் சாட்டினார். கடந்ம டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன் கொடுத்தார் என்ற காரணத்திற்காக அவர் மீது இணையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு, அதன் பிறகு அவர் டி20 போட்டியிலிருந்து நீக்கப்பட்டார்.

முகமது ஷமியின் செயல்பாடு

முகமது ஷமியின் செயல்பாடு

இருப்பினும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக முகமது ஷமி இம்முறை பதினாறு போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் வரிசையில் மூன்றாவது இடத்தை முகமது ஷமி பிடித்திருந்தார். அப்படி இருந்தும் அவர் டி20 அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டிருப்பது ரசிகர்களையும் விமர்சனங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது,

Story first published: Thursday, September 8, 2022, 18:45 [IST]
Other articles published on Sep 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+