Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 ஆசிய கோப்பையை வென்று என்ன பயன்.. ராகுல் டிராவிட்டின் பயிற்சி.. ரவி சாஸ்திரி வேதனை பேச்சு!

மும்பை: ராகுல் டிராவிட் கொடுத்து வரும் பயிற்சிகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார். அதில் 2 ஆசிய கோப்பையை வென்று தந்தும் பலனில்லை என மனவேதனையை பதிவு செய்துள்ளார்.

2013ம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி கோப்பையை வென்றுவிட வேண்டும் என்பது இந்திய அணியின் கனவாகவே உள்ளது. இதற்காக கேப்டன்கள் மாறிவிட்டனர், பயிற்சியாளர்களும் மாறிவிட்டனர், ஆனால் சொதப்பல் மட்டும் ஏற்பட்டுக்கொண்டே தான் உள்ளன.

அந்தவகையில் தான் ரவிசாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராகாமல் ராகுல் டிராவிட்டிற்கு பதவி கொடுக்கப்பட்டது. பதவியேற்று 16 மாதங்கள் நிறைவடைந்தவிட்ட சூழலில் டிராவிட்டின் கோச்சிங்கில் நல்லதும் உண்டு,தவறுகளும் நடந்துள்ளன.

புள்ளிவிவரம்

புள்ளிவிவரம்

தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை அடுத்தடுத்து இழந்தது. ஆசிய கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறாமல் வெளியேறியது. டி20 உலகக்கோப்பையில் அரையிறுதி சுற்றிலேயே வெளியேறிவிட்டது. மறுபுறம் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துள்ளார், இந்தியாவில் தொடர்ச்சியாக வெற்றி மட்டுமே என்ற பெருமையையும் காப்பாற்றி வருகிறார்.

ரவிசாஸ்திரி கருத்து

ரவிசாஸ்திரி கருத்து

இந்நிலையில் இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசியுள்ளார். அதில், ராகுல் டிராவிட் சில விஷயங்களை சாதித்து காட்ட சில நாட்கள் எடுத்துக்கொண்டு தான் ஆகும். ஆனால் ராகுல் என்.சி.ஏவில் இருந்துள்ளதால், இளம் வீரர்கள் பற்றி நன்கு அறிவார். டிராவிட்டிற்கு நேரம் கொடுத்தால் போதும், நிச்சயம் பெரிய ரிசல்ட்களை கொடுப்பார் என நம்புகிறேன்.

மக்களின் பிரச்சினை

மக்களின் பிரச்சினை

நமது நாட்டில் மக்களின் நியாபகசக்தி மிகவும் குறைவு தான். வெற்றி பெற வேண்டும் என நினைத்துவிட்டால், வெற்றியை தேடி கொடுத்துவிட வேண்டும். அதுபோன்று தான் 2 முறை ஆசிய கோப்பையை வென்று கொடுத்தோம். ஆனால் யாருமே அதை பற்றி பேசவில்லை. மறந்துவிட்டனர். ஆனால் ஆசிய கோப்பையில் தோல்வியடைந்தால் மட்டும் பெரிய பிரச்சினை ஆகிறது.

அதுதான் சிக்கல்

அதுதான் சிக்கல்

அனைவருமே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் களமிறங்குவார்கள். ஆனால் அங்கு எவ்வளவு கடின முயற்சிகளை போடுகிறோம் என்பதில் தான் உள்ளது. எனவே டிராவிட்டிற்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள், நிரூபித்துக் காட்டுவார்கள் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்தாண்டு இறுதியில் நடைபெறும் உலக்கோப்பை தொடர் இந்தியாவில் தான் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, March 21, 2023, 16:01 [IST]
Other articles published on Mar 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+