Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாடு முக்கியமா? ஐபிஎல் முக்கியமா? சீக்கிரம் முடிவு எடுங்க.. ரவி சாஸ்த்ரி எச்சரிக்கை

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் தற்போது முடிவடைந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் ஐபிஎல் 16வது சீசன் தொடங்குகிறது.

இதனால் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் யாரும் ஓய்வு இல்லாமல் தொடர்ந்து இரண்டு மாதங்கள் விளையாட உள்ளனர்.

அந்தத் தொடர் முடிந்து அடுத்த 10 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுகிறது. இதனால் முக்கிய இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

கடினமாக இருக்கிறது

கடினமாக இருக்கிறது

இது குறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, யோசித்து பார்க்கவே மிகவும் கடினமாக இருக்கிறது. நிறைய வீரர்களுக்கு இப்போது காயங்கள் ஏற்படுகிறது. நாங்கள் விளையாடிய காலகட்டத்தில் எங்களுக்கு இருந்த வசதிகள் எல்லாம் மிகக் குறைவு. அப்போது கூட நாங்கள் எட்டு முதல் 10 ஆண்டுகள் வரை ஒவ்வொரு வீரரும் விளையாடினோம். ஒவ்வொரு ஆண்டும் 8 முதல் 10 மாதம் வரை கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவோம்.

ஆலோசனை

ஆலோசனை

ஆனால் இப்போது நிலைமையே வேறு .தொடர்ந்து அதிக அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அது பற்றி கேள்வியே வேண்டாம். உலகம் முழுவதும் தற்போது லீக் தொடர்கள் நடைபெற்று வருகிறது. இதனால் வீரர்கள் ஓய்வெடுக்கும் நேரம் குறைந்து வருகிறது. ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வீரர் உடன் அமர்ந்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

நாடு முக்கியம்

நாடு முக்கியம்

உங்களுக்கு கிரிக்கெட்டும் அதிக அளவில் நடைபெற வேண்டும், அதேசமயம் வீரர்களுக்கு ஓய்வு என்பதும் கொடுக்க வேண்டும். ஐ பி எல் தொடராக இருந்தாலும் சரி கிரிக்கெட் வாரியம் இதில் முக்கிய முடிவு எடுக்க வேண்டும். அணிகளிடம் எங்களுக்கு இந்த வீரர்கள் எல்லாம் இந்திய அணிக்காக தேவை. இந்திய நலனுக்காக சில வீரர்களை ஐபிஎல் லீக் போட்டியில் விளையாட வைக்காதீர்கள் என்று சொல்ல வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

பிசிசிஐக்கு கோரிக்கை

பிசிசிஐக்கு கோரிக்கை

நாட்டின் நலனுக்காக இந்த முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே உலக கோப்பையில் இடம்பெறக்கூடிய ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயம் காரணமாக கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பைக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் வீரர்களுக்கு சரியான முறையில் ஓய்வு வழங்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Story first published: Thursday, March 23, 2023, 17:07 [IST]
Other articles published on Mar 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+