Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"மூட்டை மூட்டையாய் சாணி" - நடிகையுடனான டேட்டிங் சர்ச்சை - விளாசிய ரவி சாஸ்திரி

மும்பை: நடிகை நிர்மத் கவுர் உடனான டேட்டிங் குறித்த கேள்விக்கு, காரசாரமாக பதில் அளித்துள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

இந்திய கிரிக்கெட் அணியையும், பாலிவுட் சினிமாவையும் எப்போதும் பிரிக்க முடியாது. இரண்டும் வெவ்வேறு துறையாக இருந்தாலும், கமர்ஷியல் ரீதியில் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.

குறிப்பாக, கிரிக்கெட் வீரர்களை நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுப்பது என்று மாதத்துக்கு ஒரு செய்தி வெளியாகும். ஏன்.. நம்ம கேப்டன் கோலியின் மனைவியே பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தானே.

 தோனி - தீபிகா

தோனி - தீபிகா

எனினும், இதில் முக்கால்வாசி செய்திகள் வெறும் வதந்தியாகவே இருக்கும். அந்த வதந்தியை ஊர் முழுக்க பலர் வாந்தியெடுத்து வைத்திருப்பார்கள். தல தோனிக்கு கூட, 14 வருடங்களுக்கு முன்பே இது போன்று புரளியை கிளப்பி விடுபவர்கள் கொக்கி போட்டார்கள். யாருடன் தெரியுமா? நடிகை தீபிகா படுகோனேவுடன். 2007ம் ஆண்டு தீபிகா நடித்த 'ஓம் ஷாந்தி ஓம்' ரிலீசாகி பெரிய ஹிட்டானது. அப்படத்தை தோனி ரொம்பவே எதிர்பார்த்து, தியேட்டரில் சென்று பார்த்தார். இதனை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட, அவ்வளவுதான்.. தீபிகாவுடன் தோனி டேட்டிங் என்று கிளப்பிவிட, 'அந்த பொண்ணு ஓம் ஷாந்தி ஓம்-ல நடிச்சிருக்கு-ங்கறத தாண்டி எனக்கு அவரை பற்றி வேறு ஒன்றுமே தெரியாது' என்று நச்சென்று பதில் அளித்தார் தோனி. பிறகு, நடிகை அசினுடன் டேட்டிங் என்றும் கிளப்பிவிட்டார்கள். இப்போது இந்த மூன்று பேருக்கும் வெவ்வேறு இடத்தில் கல்யாணமாகிவிட்டது வேறு கதை.

 விளாசிய சாஸ்திரி

விளாசிய சாஸ்திரி

இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு இப்படியொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகை நிர்மத் கவுர் என்பவரையும், இவரையும் இணைத்து கடந்த 2018 முதலேயே வதந்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து அவர் இங்கிலாந்து தொடருக்கு கிளம்பும் முன் அளித்த பேட்டியில், தனது பாணியில் இதுகுறித்த கேள்விக்கு விட்டு விளாசியுள்ளார்.

 மாட்டு சாணி

மாட்டு சாணி

இது குறித்து அவர் பேசுகையில், "மூட்டை மூட்டையாய் மாட்டு சாணி இருக்கும் போது, அங்கு பதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நான் மாட்டு சாணி என்று சொல்லும் போதே, நீங்கள் அந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள வேண்டும்" என்று சாஸ்திரி கூறியதாக மிட்-டே செய்தி வெளியிட்டுள்ளது.

 என் பணத்தில் குடிக்கிறேன்

என் பணத்தில் குடிக்கிறேன்

இதற்கு முன்னர் ரவி சாஸ்திரி குடிப்பது குறித்த செய்திகள் வெளியான போது, "நான் லெமன் ஜுஸ் குடித்தாலோ, பால் அல்லது தேன் குடித்தாலோ.. எது குடித்தாலும் அதை என் பணத்தில் தான் குடிக்கிறேன்" என்று பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ், இந்திய அணி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றிருக்கிறது.

Story first published: Thursday, June 3, 2021, 17:25 [IST]
Other articles published on Jun 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+