For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளரானது எப்படி..? அதிர வைக்கும் அரை டஜன் காரணங்கள்..! பரபர டுவிஸ்ட்

Recommended Video

ரவி சாஸ்திரியின் தேர்வுக்கு இன்னொரு காரணம்.. கபில் தேவ் மழுப்பல்!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு, 6 முக்கிய காரணங்கள் வெளி வந்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ளவர் ரவி சாஸ்திரி. இங்கிலாந்து உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் அவரது பதவிக்காலம் முடிந்தது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் தொடர் இருந்ததால் அவர் உள்பட அனைவருக்கும் 45 நாட்கள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

அவருடன் சேர்த்து பேட்டிங், பவுலிங், பிசியோதெரபி என அனைத்து விதமான பொறுப்புக்கும் பலர் விண்ணப்பித்துள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டது.

6 பேர் கொண்ட பட்டியல்

6 பேர் கொண்ட பட்டியல்

அதிலிருந்து 6 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கான நேர்காணல் மும்பையில் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரவி சாஸ்திரி இருந்ததால் அவர் அங்கிருந்தே வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நேர்காணலில் பங்கேற்றார்.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

பட்டியலில் டாம் மூடி, மைக் ஹசன், கேரி கிறிஸ்டன், ஜெயவர்த்தனே, ராபின் சிங் மற்றும் லால்சந்த் ராஜ்புட் ஆகியோரும் இருந்தனர். அவர்களில் கிரிஸ்டன் இங்கிலாந்து கிளப் அணிக்கு பயிற்சியாளராக அண்மையில் அறிவிக்கப்பட்டார். எனவே, அவர் போட்டியில் இருந்து தாமாகவே விலக்கிக் கொள்ளப்பட்டார்.

சாஸ்திரிக்கு முதலிடம்

சாஸ்திரிக்கு முதலிடம்

6 பேரில் கபில்தேவ் தலைமையிலான தேர்வுக் குழு 3 பேருக்கு அதிக முக்கியத் துவம் அளித்தது. அதில் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் ரவி சாஸ்திரி. அவருக்கு அடுத்தபடியாக டாம் மூடி, மைக் ஹசன் ஆகியோர் பட்டியலில் இருந்தனர். ஆனால், மைக் ஹசன் சொந்த காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

கபில் தேவ் பரிந்துரை

கபில் தேவ் பரிந்துரை

வெளிநாட்டு பயிற்சியாளருக்கு வாய்ப்பில்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படியால், ரவி சாஸ்திரிக்கே அதிக வாய்ப்பு என்று பரவலாக பேசப்பட்டது. இது தவிர, கபில்தேவும் ரவி சாஸ்திரியை பரிந்துரை செய்தாக கூற, மீண்டும் அவரே தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

2021ம் ஆண்டு வரை கோச்

2021ம் ஆண்டு வரை கோச்

அதாவது 90 சதவீதம் அவருக்கு பயிற்சியாளர் பதவி அளிக்கப்படுவதற்காக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி, வரும் 2021ம் ஆண்டு வரை இந்தியாவில் நடக்கும் டி20 கிரிக்கெட் உலக கோப்பை வரை அவர் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகள் அவர் பயிற்சியாளராக தொடருவார்.

6 முக்கிய காரணங்கள்

6 முக்கிய காரணங்கள்

ரவி சாஸ்திரியின் தேர்வு முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்பட்டாலும் அதற்கு 6 முக்கிய காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. அதில், முதலில் பார்க்கப் படுவது தேர்வுக்குழுவின் முதல் சாய்சாக அவர் இருந்தது முக்கியத் துவம் பெறுகிறது.

கோலியின் அறிவிப்பு

கோலியின் அறிவிப்பு

இரண்டாவது காரணம், அணியின் உள்ள கேப்டனின் மனநிலை என்ன என்பதாகும். அந்த விஷயத்தில் கோலி ஒரு கட்டத்தில் வெளிப்படையாக ரவி சாஸ்திரியே வேண்டும் என்று மீடியாக்களிடம் பேசி தெறிக்கவிட்டார். அவரது இந்த வெளிப் படையான ஆதரவும் ரவி சாஸ்திரிக்கு ஒரு வலிமையான விஷயமாகவே பார்க்கப்பட்டது.

சாதனைகள் பரிசீலனை

சாதனைகள் பரிசீலனை

3வது காரணம், பயிற்சியாளராக இருந்தபோது பெற்ற சில சாதனைகள் தேர்வுக் குழுவினரால் கவனமாக பரிசீலிக்கப்பட்டது. அதில் மிக முக்கியமாக பதிவு செய்யப் பட்டிருப்பது, 71 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று காட்டி அசத்தியது.

டெஸ்ட் சாதனை

டெஸ்ட் சாதனை

அப்போது தான் சர்வதேச டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்த சாதனை தேர்வுக் குழுவினரால் அதிக அளவு விவாதிக்கப்பட்டது. இரண்டு ஆசிய கோப்பையை பெற்றுத் தந்தது அவரது சாதனைகளில் முக்கியமாக பார்க்கப்பட்டது.

டி 20 வெற்றி சதவீதம்

டி 20 வெற்றி சதவீதம்

4வது காரணம், இந்திய அணியானது டி 20 கிரிக்கெட் தொடர்களில் பெற்றிருக்கும் அதிக சதவீத வெற்றி. அதாவது, ரவி சாஸ்திரியின் பதவி காலத்தில் மொத்தம் இந்திய அணி 37 டி 20 போட்டிகளில் விளையாடி 25 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

உள்ளேயிருந்து ஆதரவு

உள்ளேயிருந்து ஆதரவு

5வது காரணம் தான் இருப்பதிலேயே மிகுந்த வலுவானதாக அறியப்படுகிறது. அணி பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டது. அதன் தலைவராக கபிலும், மற்ற உறுப்பினர்களாக அன்ஷூமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமியும் நியமிக்கப்பட்டனர்.

பந்துவீச்சில் முன்னேற்றம்

பந்துவீச்சில் முன்னேற்றம்

இந்த குழுவல் அன்ஷூமன் கெய்க்வாட் ஏற்கனவே ரவி சாஸ்திரிக்கு ஓப்பனாக ஆதரவை அறிவித்து இருந்தார். கபிலும் தமது ஆதரவு ரவி சாஸ்திரிக்கு தான் என்றும் கூறியிருந்தார். 6வது காரணம், ரவி சாஸ்திரியின் பதவிக்காலத்தில் இந்திய அணியின் பந்துவீச்சில் முன்னேற்றம் ஏற்பட்ட முன்னேற்றம். உலகில் மற்ற அணிகளை அச்சுறுத்தும் அளவுக்கான பவுலர்களை பெற்றிருந்தது.

உலக கோப்பை தோல்வி

உலக கோப்பை தோல்வி

இந்த அரை டஜன் காரணங்கள் தான் அவருக்கு மீண்டும் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை பெற்றுத் தந்தது என்று கூறலாம். ஆதரவு இருந்தாலும், அணியின் உலக கோப்பை தோல்வியை பெரிதாக இந்த தேர்வில் கருத்தில் கொள்ள வில்லை என்றே தெரிகிறது.

Story first published: Friday, August 16, 2019, 19:43 [IST]
Other articles published on Aug 16, 2019
English summary
The top reasons behind the selection of ravi shatri as a head coach again.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X