Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரவி சாஸ்திரி சொன்ன அந்த ஒத்த பதில்..!! டிக் செய்த தேர்வுக்குழு…!! வெளிவந்த இண்டர்வியூ ரகசியம்.!!

மும்பை: தேர்வுக் குழுவிடம் ரவி சாஸ்திரி சொன்ன ஒரேயொரு பதிலால் பயிற்சியாளர் ஆக்கப்பட்டார் என்று பிசிசிஐ தரப்பில் புதிய தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.

இந்திய அணியின் பயிற்சியாளராக நேற்று மீண்டும் ரவி சாஸ்திரி அறிவிக்கப்பட்டார். வரும் 2021ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி வரை அவர் பயிற்சியாளராக நீடிப்பார்.

அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான குழு இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது. முன்னதாக இக்குழு நேற்று பயிற்சியாளர் பதவிக்கு 6 பேரிடம் நேர்காணல் நடத்தியது.

சாஸ்திரி கருத்துகள்

சாஸ்திரி கருத்துகள்

நேர்காணலில் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பகிர்ந்து கொண்ட கருத்துகள் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் பல முக்கிய விஷயங்களை ரவி சாஸ்திரி முன் வைத்ததாகவும், அதுவே அவரது தேர்வுக்கு காரணமாக அமைந்ததாகவும் பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

தோல்வி ஏன்?

தோல்வி ஏன்?

அவர் தரப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: நேர்காணலில் ரவி சாஸ்திரியிடம் இந்திய அணியின் உலக கோப்பை தொடர் தோல்வி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வித்தியாசமானது. அதாவது, இந்தத் தொடரில் ஒரு மோசமான நாள் அணியை மோசமானதாக ஆக்காது என்று தெரிவித்தார்.

கோலி உதாரணம்

கோலி உதாரணம்

அத்துடன் சாஸ்திரி தனக்கு இந்திய அணியில் ஒரு சில வேலைகள் இன்னும் முடியாமல் உள்ளதாக கூறியுள்ளார். கேப்டன் கோலியை அவர் ஏராளமாக புகழ்ந்திருக்கிறார். கேப்டன் கோலி அணியின் வீரர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார் என்று சாஸ்திரி தெரிவித்தார்.

உடற்தகுதி கவனம்

உடற்தகுதி கவனம்

எனவே இத்தகைய கேப்டனை கொண்ட இந்திய அணி மிகவும் சிறப்பு வாய்ந்த அணியாக தான் இருக்கும் என்றும் ரவி சாஸ்திரி தெரிவித்தார். அத்துடன் வீரர்கள் உடற்தகுதியில் கோலி அதிக கவனம் செலுத்துவதால் அணி நல்ல முறையில் உள்ளதாக சாஸ்திரி கூறினார்.

வீரர்கள் திறன்

வீரர்கள் திறன்

ரவி சாஸ்திரிக்கு இந்திய அணி வீரர்களின் விளையாட்டு திறன் குறித்து நன்றாக தெரிந்தவர். ஆகையால் அவர் அளித்த பதில்களோடு இதனையும் ஒப்பிட்டு பின்னர் தேர்வு செய்யப்பட்டு விட்டார் என்று கூறினார்.

Story first published: Saturday, August 17, 2019, 12:33 [IST]
Other articles published on Aug 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+