பேசிப் பேசியே ஷிகர் தவானை ஃபுல் ஃபார்முக்கு கொண்டு வந்த ரவி சாஸ்த்ரி
மெல்போர்ன்: உலகக் கோப்பை போட்டிகள் துவங்கும் முன்பு அணியின் டைரக்டர் ரவி சாஸ்திரி ஷிகர் தவானை தனியாக அழைத்து பேசியது தான் அவர் தற்போது சிறப்பாக விளையாட காரணம் என்று அணி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா தான் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டிகளில் ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி வருகிறார். முன்னதாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது சொதப்பிய தவான் தற்போது சூப்பராக விளையாட அணியின் டைரக்டர் ரவி சாஸ்த்ரி தான் காரணம் என்று அணி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ரவி சாஸ்த்ரி
உலகக் கோப்பை போட்டிகள் துவங்கும் முன்பு ரவி சாஸ்த்ரி ஷிகர் தவானை அழைத்து அவருடன் நெடுநேரம் பேசினார். அப்போது அவர் தவானை ஊக்குவித்து பேசினார்.

அதிசயம்
ரவி, தவானிடம் அவ்வளவு நேரம் பேசியது வீண் போகவில்லை. அதனால் அதிசயம் நடந்துவிட்டது.

வீரர்கள்
ரவி டெக்னிக்கல் விஷயம் பற்றி வீரர்களிடம் பேச மாட்டார். வீரர்களின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப பேசுவார். இத்தனை நாட்கள் எந்த முறையில் பேட்டிங் செய்து ரன்கள் எடுத்தீர்களோ அதே முறைப்படி விளையாடுங்கள் என்று தவானிடம் ரவி கூறினார் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரன்கள்
உலகக் கோப்பை போட்டிகளில் ஷிகர் தவான் 2 சதங்கள், ஒரு அரை சதம் உள்பட 337 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications