Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு புதிய கேப்டன் ? ஐபிஎல் சீசனுக்கு பிறகு முக்கிய முடிவு.. ரவி சாஸ்த்ரி தகவல்

மும்பை: இந்திய அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்து ஐபிஎல் சீசனுக்கு பிறகு தெரிந்துவிடும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி தெரிவித்துள்ளார்.

Recommended Video

IPL 2022 முடிந்த பின் அடுத்த Captain குறித்து BCCI முடிவெடுக்கும் - Ravi Shastri தகவல்

விராட் கோலி விலகலுக்கு பிறகு, இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.

இந்த நிலையில், அவர் வயது அதிகமாகி வருவதால் இப்போதே அடுத்த கேப்டன் குறித்து பேச்சு தொடங்கிவிட்டன.

அடுத்த கேப்டன்

அடுத்த கேப்டன்

இந்த நிலையில், புதிய கேப்டன் யார் என்பது குறித்து பேசிய ரவி சாஸ்த்ரி,பிசிசிஐ இம்முறை ஐபிஎல் அணிக்கு தலைமை தாங்கும் நபர்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார். ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் மீது தற்போது கவனம் திரும்பியுள்ளதாக ரவி சாஸ்த்ரி கூறியுள்ளார்.

தேர்வுக்குழு

தேர்வுக்குழு

இதில் ரிஷப் பண்ட்க்கு கிரிக்கெட் அறிவு அதிகம் இருப்பதாக பாராட்டிய ரவி சாஸ்த்ரி, அடுத்த கேப்டன் குறித்து முடிவு செய்ய தேர்வுக்குழுவினருக்கு நடப்பு ஐபிஎல் தொடர் நல்ல வாய்ப்பாக அமையும் என்று ரவி சாஸ்த்ரி விளக்கம் அளித்துள்ளார். உலகக் கோப்பை தொடர் இன்னும் 4 மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதை ரவி சாஸ்த்ரி குறிப்பிட்டார்.

வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சு

இதனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசும் வீரர்களை தேர்வுக்குழுவினர் கவனிப்பார்கள் என்றும் ரவி சாஸ்த்ரி குறிப்பிட்டார். கேப்டனாக ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுவதாகவும், அவர் 5 ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது பெரும் சாதனை என்றும் ரவி சாஸ்த்ரி கூறியுள்ளார்.

முட்டாள்தனமான முடிவு

முட்டாள்தனமான முடிவு

கிரிக்கெட் வர்ணனைக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த ரவி சாஸ்த்ரி, சிலரின் முட்டாள் தனமான முடிவு மற்றும் விதிகளால் தம்மால் கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் வர்ணனைக்கு திரும்ப முடியவில்லை என்று வேதனை தெரிவித்தார். நடப்பு சீசனில் ரெய்னாவுடன் ஹிந்தி வர்ணனையில் ரவி சாஸ்த்ரி ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 23, 2022, 11:45 [IST]
Other articles published on Mar 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+