அவரை ரொம்ப மிஸ் பண்றோம்.. அவர் வந்தா தான் சரியா இருக்கும்.. ரவி சாஸ்திரி யாரை சொல்றாரு?
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
அங்கே டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் பங்கேற்க உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஒரு முக்கிய வீரர் இல்லாமல் தவித்து வருவதாக கூறியுள்ளார். யாருப்பா அவரு?

முக்கிய இழப்பு இவர் தான்
ஆஸ்திரேலியாவில் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியின் போது, "நாங்கள் ஒரு வீரரை அணியில் முக்கியமாக இழந்துள்ளோம் என்றால் அது ஹர்திக் பண்டியா தான். அவர் தான் அணிக்கு சம பலத்தை அளித்து வந்தார்" என கூறினார். பண்டியா ஆசிய கோப்பை போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் தற்போது ஓய்வில் இருக்கிறார்.

ஆல்-ரவுண்டர் பண்டியா
மேலும், "பண்டியா பந்துவீச்சாளராகவும், பேட்ஸ்மேனாகவும் செயல்படுவதால், எங்களால் கூடுதல் பந்துவீச்சாளரை உபயோகிக்க முடியும்" என பண்டியாவின் ஆல்-ரவுண்டர் தன்மையை குறிப்பிட்டு பேசினார் ரவி சாஸ்திரி.

அணித் தேர்வில் குழப்பம்
பண்டியா இல்லாததால் அணித் தேர்வில் சிறு குழப்பம் இருப்பதையும் கூறினார். "அவர் இல்லாததால் அணித் தேர்வில் இரண்டு முறை யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டால், அவரது இழப்பு பெரிதாக இருக்காது எனவும் கூறினார்.

இந்தியாவின் ஆல்-ரவுண்டர் பிரச்சனை
இந்திய அணியில் பண்டியா தவிர்த்து கேதார் ஜாதவ் மட்டுமே ஆல்-ரவுண்டராக இருக்கிறார். அவரும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார். அவரது இடமும் அணியில் ஊசலாடிக் கொண்டு தான் இருக்கிறது. டெஸ்ட் மற்றும் டி20யிலும் இந்திய அணி ஆல்-ரவுண்டர் இல்லாமல் தடுமாறி வருகிறது.


Click it and Unblock the Notifications