மும்பை : உலக கிரிக்கெட்டில் புலி தான் விராட் கோலி என்று நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்த்ரி தெரிவித்துள்ளார். ரவி சாஸ்த்ரியும், விராட் கோலியும் உற்ற நண்பர்களாக இருக்கிறார்கள். ரவி சாஸ்த்ரி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வர விராட் கோலி தான் முக்கிய காரணமாக இருந்தார்.
எனினும் இந்த ஜோடி , ஒரு முறை கூட ஐசிசி கோப்பையை வெல்லவில்லை என்பதால், இருவரும் தங்களது பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்த நிலையில், ரோகித் சர்மா,டிராவிட் ஜோடியும் ஐசிசி தொடரை கைப்பற்றவில்லை.

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புதிய கேப்டன்களை பிசிசிஐ கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சூழல் இப்படி இருக்க, விராட் கோலியை ரவி சாஸ்த்ரி புகழ்ந்து பேசி இருக்கிறார். இது குறித்து பேசிய ரவி சாஸ்த்ரி, உலக கிரிக்கெட்டின் புலி போல் விராட் கோலி இருக்கிறார்.
உடல் தகுதி, ஒரு போட்டிக்கு தயாராகுவது என அனத்திலும் விராட் கோலி ஒரு பெஞ்ச் மார்க்கை செட் செய்துவிட்டார்.மற்றவர்களுடைய கவனத்தை உலகம் முழுவதும் விராட் கோலி ஆட்கொண்டுவிட்டார். விராட் கோலியின் தன்னம்பிக்கை, மன பலம் எல்லாம் பார்க்கும் போது எனக்கு பிரம்மிப்பாக இருக்கும்.
விராட் கோலி அனைத்தையும் சாப்பிட்டுவிடுவார். அதனால் தான் இப்படி பலமாக காணப்படுகிறார் என்று நினைத்தேன். பிறகு தான் விராட் கோலி சொன்னார். நான் ஒரு சைவம். நான் அசைவம் சாப்பிடுவதில்லை என்று கூறினார். இதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடல் நலத்தை கருத்தில் கொண்டு தன்னுடைய உணவு பழக்கத்தையும் அவர் மாற்றிவிட்டதாக ரவி சாஸ்த்ரி பாராட்டினார்.
எனினும் விராட் கோலி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் சொதப்பியது ரசிகர்களை வேதனை அடைய செய்துள்ளது. இதனால், விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். இல்லை என்றால், அவருடைய இடத்திற்கும் ஆபத்து ஏற்படலாம்.