For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“கங்குலி எந்த கோப்பையை வென்றுக்கொடுத்தார்” கேப்டன்சி விவகாரம்.. ரவிசாஸ்திரி பேச்சால் சர்ச்சை!

மும்பை: விராட் கோலியின் கேப்டன்சி விவகாரத்தில் மீண்டும் வாய் திறந்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி.

Recommended Video

Ravi Shastri Feels Captains Are Not Judged by World Cup Titles | Oneindia Tamil

கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்தே கேப்டன்சி பிரச்சினை இந்திய அணியில் பெரும் பூகம்பமாக வெடித்து வருகிறது.

விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் மாறுபட்ட கருத்துக்களை கூறியதால், யார் பொய் சொல்கிறார்கள் என்ற குழப்பம் நீடித்தது.

கோலியின் மீதான விமர்சனம்

கோலியின் மீதான விமர்சனம்

இந்நிலையில் விராட் கோலிக்கு ஆதரவாக முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி களமிறங்கி பேசியுள்ளார். விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணம் ஐசிசி கோப்பைகள் தான். அவர் ஒரு உலகக்கோப்பை கூட வென்றுக்கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்களே அழுத்தம் கொடுத்தது.

ரவிசாஸ்திரி விளக்கம்

ரவிசாஸ்திரி விளக்கம்

இதுகுறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி, ஒரு கேப்டனாக சவுரவ் கங்குலி கூட தான் உலகக்கோப்பை வென்றுக்கொடுக்கவில்லை. இதற்கு எல்லாம் பதில் உண்டா என்பது போல பேசியுள்ளார். வெற்றிகரமான கேப்டன் என்பதை ஐசிசி கோப்பையை வென்றுக்கொடுத்தாரா என்பதை வைத்து எப்படி நிர்ணயம் செய்வார்கள்.

கங்குலி எதை வென்றார்

கங்குலி எதை வென்றார்

அப்படி ஐசிசி கோப்பை வென்றுக்கொடுப்பவர் தான் சிறந்த கேப்டன் என்றால் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட, லக்‌ஷ்மண் ஆகியோர் கூட தான் உலகக்கோப்பையை வென்றதில்லை. அதற்கென்று அவர்கள் மோசமான வீரர்கள் என்று கூறி விட முடியுமா? பின்னர் எப்படி கோலியை விமர்சித்து பேசலாம்.

 சச்சின் காத்திருப்பு

சச்சின் காத்திருப்பு

சச்சின் டெண்டுல்கரே 6 உலகக் கோப்பைகளில் விளையாடிப் பிறகுதான் கடைசியில் ஒரு கோப்பையை வென்றார். எனவே உலகக்கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதற்காக விமர்சிக்கக்கூடாது. தனிப்பட்ட விளையாட்டு எப்படி உள்ளது என்பதை தான் பார்க்க வேண்டும் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

Story first published: Tuesday, January 25, 2022, 19:56 [IST]
Other articles published on Jan 25, 2022
English summary
Ravi Shastri gives answer over virat kohli's captaincy, Says World Cup Titles are Not a Criteria to Judge a Player
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+