Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் போட்டி அபார வெற்றி... டீம் இந்தியா பார்ட்டி... யாரு இதுக்கெல்லாம் தலைமை?

புனே : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியை இந்தியா அபாரமாக வெற்றி கொண்டுள்ளது.

இதையடுத்து இந்திய அணி வீரர்கள் இன்றைய தினம் அந்த வெற்றியை கலக்கலாக கொண்டாடியுள்ளனர்.

இந்த பார்ட்டியை புகைப்படமாக எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தலைமை கோச் ரவி சாஸ்திரி.

ஒருநாள் போட்டியில் வெற்றி

ஒருநாள் போட்டியில் வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட், டி20 தொடர்களை தலைமை கோச் ரவி சாஸ்திரி தலைமையிலான இந்திய அணி அபாரமாக வெற்றி கொண்டுள்ளது. ஒருநாள் தொடரின் நேற்றைய முதல் போட்டியிலும் 66 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி கொண்டுள்ளது.

அடுத்த போட்டி 26ம் தேதி

அடுத்த போட்டி 26ம் தேதி

இந்நிலையில் அடுத்த போட்டி வரும் வெள்ளிக்கிழமைதான் என்பதால் இன்றைய தினம் கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த கொண்டாட்டத்தில் கேப்டன் கோலி, க்ருணால் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா கேஎல் ராகுல் சஹல், ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

சாஸ்திரி டிவீட்

சாஸ்திரி டிவீட்

மேலும் தலைமை கோச் ரவி சாஸ்திரியும் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இந்த கொண்டாட்டத்தை புகைப்படமாக எடுத்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் பயோ பபள் வரும் போகும், வெற்றிகள் வரும் போகும் என்று குறிப்பிட்டுள்ள சாஸ்திரி புனேவில் சிறப்பான தினம் என்று ட்வீட் செய்துள்ளார்.

அடுத்தடுத்த தொடர்கள்

அடுத்தடுத்த தொடர்கள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் இரண்டு தொடர்களை இந்தியா சிறப்பாக வெற்றி கொண்டுள்ள நிலையில் தற்போது நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரையும் வெற்றி கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. முதல் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கொண்டுள்ள நிலையில் வரும் 26 மற்றம் 28 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறவுள்ளன.

Story first published: Wednesday, March 24, 2021, 23:02 [IST]
Other articles published on Mar 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+