For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பலமான இந்திய அணி தான்..ஆனால் ஒரு பெரிய குறை இருக்கு.. டி20 உலககோப்பை குறித்து ரவி சாஸ்த்ரி விமர்சனம்

மும்பை : டி20 உலக கோப்பை தொடருக்காக இந்திய அணி வரும் 17ஆம் தேதி பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

இந்த தொடருக்காக இந்திய அணி இரண்டு வாரம் முன்பே ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்று அங்கு வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தோல்வியை தழுவி வெளியேறியது. இதனால் இம்முறை இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறும் என அனைவராலும் நம்பப்படுகிறது.

சிறந்த அணி

சிறந்த அணி

இதனிடையே, இந்திய அணி குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி அளித்துள்ளார். அதில் இந்திய அணியின் அங்கமாக கடந்த ஆறு ஏழு ஆண்டுகள் நான் இருக்கிறேன். முதலில் பயிற்சியாளராகவும் தற்போது வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறேன். என்னை பொறுத்த வரைக்கும் டி20 போட்டிகளில் இந்தியா களமிறக்கும் சிறந்த அணி இதுவாக தான் இருக்கும்.

பலமான பேட்டிங்

பலமான பேட்டிங்

சூரியகுமார் யாதவ் நான்காவது இடத்திலும், ஹர்திக் பாண்டியா ஐந்தாவது இடத்திலும், பண்ட் அல்லது கார்த்திக் ஆறாவது இடத்திலும் பேட்டிங்கில் களமிறங்குவது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். இதனால் முன்வரிசை வீரர்கள் எவ்வித நெருக்கடியும் இன்றி அதிரடியாக விளையாடலாம். இந்திய அணியில் இருக்கும் ஒரே ஒரு குறை என்றால் அது ஃபில்டிங் என்று நான் கருதுகிறேன்.

ஃபில்டிங்கில் கவனம்

ஃபில்டிங்கில் கவனம்

அதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஃபில்டிங்கில் கடும் பயிற்சி எடுக்க வேண்டும்.பாகிஸ்தானுக்கு எதிராக முதல் ஆட்டத்தில் விளையாடும் போது அவர்கள் தங்களது சிறப்பான ஃபில்டிங்கை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஃபில்டிங் மூலம் உங்களால் 15 முதல் 20 ரன்களை தடுக்க முடியும். இல்லையேனிக் நீங்கள் பேட்டிங் செய்யும்போது ஒவ்வொரு ஆட்டத்திலும் நீங்கள் 15 ,20 ரன்கள் கூடுதலாக எடுக்க வேண்டியதாக இருக்கும்.

அவசியம்

அவசியம்

ஃபில்டிங்கை பொறுத்த வரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ,தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஏன் இலங்கையை எடுத்துக் கொள்ளுங்கள். ஆசிய கோப்பை இறுதி போட்டியில் அவர்கள் தங்களது ஃபில்டிங் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றனர். பந்து வீச்சில் பும்ரா இல்லை என்றாலும் வேறு ஒரு வீரருக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என நான் கருதுகிறேன் என்று அவர் கூறினார். இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் 23ஆம் தேதி பாகிஸ்தானை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்கிறது

Story first published: Thursday, October 13, 2022, 10:38 [IST]
Other articles published on Oct 13, 2022
English summary
Ravi shastri speaks about India strength and weakness in t20 world cup பலமான இந்திய அணி தான்..ஆனால் ஒரு பெரிய குறை இருக்கு.. டி20 உலககோப்பை குறித்து ரவி சாஸ்த்ரி விமர்சனம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+