ஐபிஎல் தொடரால் ஆபத்து.. இந்திய அணியா? ஐபிஎல் அணியா எது முக்கியம்.. ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை
மும்பை : 2023ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால், ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் உம்ரான் மாலிக் நேற்று 13 பந்துகளை வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
இரண்டு முக்கிய விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். குறிப்பாக அதிரடி வீரர் பிரஸ்வெலை உம்ரான் மாலிக் போல்ட் ஆக்கி அசத்தினார்.

உம்ரான் மாலிக்
இது குறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி டி20 கிரிக்கெட்டை விட ஒரு நாள் கிரிக்கெட்டில் தான் உம்ரான் மாலிக்கிற்கு நிறைய வாய்ப்புகள் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் உம்ரான் மாலிக் தற்போது நிறைய கிரிக்கெட்டுகளை விளையாடி வருகிறார். இதன் மூலம் அவருக்கு தேவையான அனுபவம் கிடைத்திருக்கும்.

உடல்தகுதி முக்கியம்
இந்திய அணியில் ஏதேனும் ஒரு வீரருக்கு காயம் ஏற்படலாம். அப்போது உம்ரான் மாலிக்கை நீங்கள் அணியில் கூடவே வைத்திருக்க வேண்டும். உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவிக்க இன்னும் காலம் இருக்கிறது. வீரர்களுடைய உடல் தகுதி என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இதனால் தான் சொல்கிறேன் ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வீரர்கள் அதில் எளிதாக காயம் அடையலாம்.

கண்காணிக்க வேண்டும்
இதனால் பந்துவீச்சாளர்களுடைய சுமையை நாம் கண்காணிக்க வேண்டும். இதேபோன்று காயத்தால் அவதிப்பட்டு வரும் பும்ரா அணிக்கு திரும்பி விடுவார் என நம்புகிறேன். இந்திய அணியின் ஸ்டார் வீரர் என்றால் அது அவர்தான். அவர் அணிக்கு திரும்பியவுடன் இந்தியனின் பலம் மேலும் அதிகரிக்கும். இதேபோன்று ஹர்திக் பாண்டியாவும் பந்துவீச்சில் முக்கிய வீரராக திகழ்கிறார். அவர் பந்து வீசும் போது இந்திய அணி முற்றிலும் வேறொரு அணியாக விளங்கும் .

பல விதமான பவுலர்கள்
சொந்த மண்ணில் ஹர்திக் சிறப்பான ரெக்கார்டுகளை வைத்திருக்கிறார். இதேபோன்று அர்ஷ்தீப் சிங்கும் இந்திய அணியில் இருக்கிறார். குல்தீப், சாகல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை பலவிதமான வீரர்கள் உள்ளனர். இதனால் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்று ரவி சாஸ்திரி கூறினார்.


Click it and Unblock the Notifications