Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களுக்கு பிடிக்காத இவரு தான் இந்திய அணியின் கோச்.. ஷாக் கொடுக்கும் பிசிசிஐ!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் தேர்வு ஆகஸ்ட் 16 அன்று நடைபெற உள்ளது.

எனினும், அதன் முடிவு என்ன என்பது பிசிசிஐ வட்டாரத்தில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ரசிகர்களுக்கு பிடிக்கிறதோ, இல்லையோ ரவி சாஸ்திரி தான் மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என இரண்டு முக்கிய காரணங்களை கூறுகிறார்கள்.

நிச்சயம் அல்வா

நிச்சயம் அல்வா

ஏற்கனவே, ஆறு பேரை பயிற்சியாளர் பதவிக்கு தேர்வு செய்ய நேர்முகத் தேர்வு நடத்த உள்ளதாக செய்திகள் வந்த நிலையில் தான், இந்த தகவலும் வலம் வருகிறது. ரவி சாஸ்திரி தவிர மற்ற ஐந்து பேருக்கும் அல்வா கொடுக்கப்படும் என்பதே தற்போதைய நிலைமை.

யார் அந்த ஆறு பேர்?

யார் அந்த ஆறு பேர்?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த ஏராளமானோரில் இருந்து ஆறு பேரை தேர்வு செய்துள்ளது கபில் தேவ் தலைமையிலான தேர்வுக் குழு. ரவி சாஸ்திரி, டாம் மூடி, மைக் ஹெஸ்ஸன், லால்சந்த் ராஜ்புத், ராபின் சிங் மற்றும் பில் சிம்மன்ஸ் என ஆறு பேரை தேர்வு செய்துள்ளது

சாஸ்திரிக்கு போட்டி யார்?

சாஸ்திரிக்கு போட்டி யார்?

இவர்களில் டாம் மூடி, மைக் ஹெஸ்ஸன் இருவரும் பயிற்சியாளர்களாக நல்ல பெயர் பெற்றவர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு பயிற்சியாளர்களாக இருந்தவர்கள். இவர்கள் இருவர் மட்டுமே ரவி சாஸ்திரிக்கு போட்டி அளிக்கக் கூடியவர்கள்.

கோலியின் ஆதரவு

கோலியின் ஆதரவு

எனினும், ரவி சாஸ்திரி இரண்டு காரணங்களால் முன்னணியில் இருக்கிறார். ஒன்று கேப்டன் விராட் கோலியின் ஆதரவு. கேப்டனுக்கு ஏற்ற பயிற்சியாளரை தேர்வு செய்வது என்ற நடைமுறை தான் கடந்த சில காலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ரவி சாஸ்திரி முன்னிலை பெறுகிறார்.

ஏராளமான வெற்றிகள்

ஏராளமான வெற்றிகள்

மற்றொரு காரணம், ரவி சாஸ்திரி பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் இந்திய அணி வெற்றிகளை வாரிக் குவித்துள்ளது. 21 டெஸ்ட் போட்டிகளில் 13 வெற்றிகள், 36 டி20 போட்டிகளில் 25 வெற்றிகள், 60 ஒருநாள் போட்டிகளில் 43 வெற்றிகள் என நல்ல நிலையில் இருக்கிறது இந்திய அணி.

பெரிய குறை இது தான்

பெரிய குறை இது தான்

பெரிய குறை என்றால் இந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது தான். ஆனால், இதை மட்டுமே வைத்து அவரை நீக்க முடியாது என்பதால், 2020 டி20 உலகக்கோப்பை வரை ரவி சாஸ்திரிக்கு தலைமை பயிற்சியாளர் பதவி வழங்கப்படும் என பிசிசிஐ வட்டாரம் கூறுகிறது.

ரசிகர்களுக்கு விருப்பம் இல்லை

ரசிகர்களுக்கு விருப்பம் இல்லை

ரசிகர்களுக்கு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருப்பதில் விருப்பம் இல்லை. அவர் நன்றாக இருக்கும் அணியை மோசமான நிலைக்கு எடுத்துச் செல்கிறார் என கூறி வருகிறார்கள். ஆனால், ரசிகர்களின் குரலை பிசிசிஐ கண்டுகொள்ளாது என்றே தெரிகிறது.

Story first published: Thursday, August 15, 2019, 23:29 [IST]
Other articles published on Aug 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+