Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரவி சாஸ்திரியே இந்திய அணி பயிற்சியாளராக தொடர்வார்.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு.. முழு விவரம்!

Recommended Video

Ravi Shastri back to coach | ரவி சாஸ்திரியே இந்திய அணி பயிற்சியாளர்.. பிசிசிஐ அறிவிப்பு

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே தொடர்வார் என அறிவித்துள்ளது கபில் தேவ் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக் குழு.

இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில் தேவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு தான் மீண்டும் அந்தப் பதவி கிடைக்கும் என கூறப்பட்டது.

அதே போல, அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவியை பெற்றுள்ளார். அவருக்கு போட்டியாக இருந்த ஐந்து பேரை முந்தி, பயிற்சியாளர் பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளார் ரவி சாஸ்திரி.

2000 விண்ணப்பங்கள்

2000 விண்ணப்பங்கள்

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சுமார் 2000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதில் இருந்து ஐந்து பேரை தேர்வு செய்தனர். தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நேரடியாக இறுதிச் சுற்று தேர்வுக்கு தகுதி பெற்றார்.

இறுதியாக ஆறு பேர்

இறுதியாக ஆறு பேர்

ரவி சாஸ்திரி தவிர்த்து டாம் மூடி, மைக் ஹெஸ்ஸன், லால்சந்த் ராஜ்புத், ராபின் சிங், பில் சிம்மன்ஸ் கடைசி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் பில் சிம்மன்ஸ் கடைசி நேரத்தில் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.

தேர்வு செய்த மூவர்

தேர்வு செய்த மூவர்

மற்ற ஐந்து பேருக்கும் கபில் தேவ் தலைமையிலான மூவர் குழு நேர்முகத் தேர்வு நடத்தியது. அந்த குழுவில் கபில் தேவ் உடன், முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெயிக்வாட் மற்றும் முன்னாள் வீராங்கனை சாந்தா ரங்கசாமி இடம் பெற்று இருந்தனர்.

ரவி சாஸ்திரி வாய்ப்பு

ரவி சாஸ்திரி வாய்ப்பு

இந்த தேர்வுக்கு பல நாட்கள் முன்பு இருந்தே ரவி சாஸ்திரி தான் மீண்டும் இந்திய அணி பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என பலமாக கூறப்பட்டது. பிசிசிஐ அதிகாரிகளே இதைக் கூறினர்.

பயிற்சியாளர்

பயிற்சியாளர்

அதே போல, ரவி சாஸ்திரி மீண்டும் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இதற்கு முக்கிய காரணம், கேப்டன் விராட் கோலியின் ஆதரவு மற்றும் இந்திய அணி இவரது காலத்தில் பெற்ற ஏராளமான வெற்றிகள் தான்.

இந்திய அணியின் அடுத்த கட்டம்

இந்திய அணியின் அடுத்த கட்டம்

இந்திய அணி அடுத்து 2020 டி20 தொடரில் விளையாட உள்ளது. அதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கி விட்டது. ரவி சாஸ்திரி டி20 உலகக்கோப்பைக்குப் பின் 2021 வரை இந்திய அணியுடன் பயணிப்பார் என தெரிகிறது.

Story first published: Friday, August 16, 2019, 18:41 [IST]
Other articles published on Aug 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+