சம்மட்டி அடி அடித்த அஸ்வின்.. கொரோனா சமயத்தில் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி!
சென்னை : கொரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் "சோசியல் டிஸ்டன்சிங்" குறித்து அதிகம் பேசப்படுகிறது.
Recommended Video
அதை பற்றி கிரிக்கெட் வீரர் அஸ்வின் அதிரடியாக சில கேள்விகளை எழுப்பி, இவற்றை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும் என கூறி உள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள மனிதர்கள் மூலமாகவே, அந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவி வருகிறது. அது குறித்து தான் அஸ்வின் சமுதாயத்திற்கு சில கேள்விகளை முன் வைத்துள்ளார்.

விழிப்புணர்வு
கொரோனா வைரஸ் தாக்கம் பரவி வரும் நிலையில் சென்னையில் அது குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது என அஸ்வின் முன்பு கூறி இருந்தார். தன் பதிவில் மக்கள் பாதிப்பு ஏற்படாது என நம்புகிறார்கள் போல என குத்திக் காட்டி இருந்தார்

சோசியல் டிஸ்டன்சிங் அவசியம்
சோசியல் டிஸ்டன்சிங் எனப்படும் மக்கள் தங்களை தாங்களே மற்றவர்களிடம் இருந்து தள்ளி வைத்துக் கொள்ளும் முறை குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், கொரோனா பரவுவதை பெரிய அளவில் தடுக்கலாம். ஆனால், இந்தியாவில் பெரும்பாலும் இது குறித்து மக்கள் இதுவரை அறியவில்லை.

அஸ்வின் பதிவு
இதுபற்றி தன் பதிவில் அஸ்வின் கூறுகையில், "சென்னையில் இன்னும் சோசியல் டிஸ்டன்சிங் மக்களின் கவனத்துக்கு வரவில்லை. இதற்கு ஒரே காரணம், வெயில் அதை தடுத்து நிறுத்தி விடும் என அவர்கள் நினைக்கிறார்கள். அல்லது எதுவும் நடந்துவிடாது என அவர்கள் நம்புகிறார்கள்" என கூறி இருந்தார்.

அஸ்வின் விமர்சனம்
சென்னை மக்களை லேசாக விமர்சித்து அந்த பதிவை அஸ்வின் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அடுத்து, கொரோனா வைரஸ் இந்த சமுதாயத்தில் எழுப்பி உள்ள சில முக்கியமான கேள்விகளை முன் வைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றுள்ளார்.

அந்த கேள்விகள்
அவரது பதிவு - "இந்த கிரகம் மனித இனத்திற்கு சவால் விடுகிறது, சமுதாயத்திற்காக நாம் பொறுப்பாக இருக்க முடியுமா என்று நம்மை கேட்கிறது. நேர்மையாகவும், மற்ற நபர்களுக்காக நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமா என்று கேட்கிறது. பதில் அளிக்க சில கடினமான கேள்விகள். பாதுகாப்பாக இருந்து கொண்டு இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கவும்". இவ்வாறு அஸ்வின் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications