Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"வைபவ் சூர்யவன்ஷி வாட்டர்பாய் வேலை பார்க்கட்டும், தப்பில்லை".. சாம்சனுக்கு ஆதரவாக அஸ்வின் பேச்சு

சென்னை: அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 15 வயதே ஆன இளம் அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷியை ஆடும் லெவனில் சேர்க்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து பேசிய முன்னாள் வீரர் அஸ்வின், வைபவ் சூர்யவன்ஷி தண்ணீர் எடுத்து வரும் வேலை செய்யட்டும் எனக் கூறி இருக்கிறார்.

இந்தப் போட்டியில் தொடக்க வீரராக ஆடிய சஞ்சு சாம்சன் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால், ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்கள் குவித்து ஃபார்மில் இருக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கு உடனடியாக வாய்ப்பளிக்க வேண்டும் என ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், முதல் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி தனது சக வீரர்களுக்குத் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு வரும் பணியைச் செய்ததும் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியது.

Ravichandran Ashwin Backs Sanju Samson Over Vaibhav Suryavanshi Selection Row After Defeat

இந்நிலையில், இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த விவகாரத்தில் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

IND vs IRE: வாஷிங்டன் சுந்தருக்கு ஓவர் கொடுப்பதா? ஸ்ரேயாஸ் ஐயரை கடுமையாக விமர்சித்த சேவாக்

IND vs IRE: வாஷிங்டன் சுந்தருக்கு ஓவர் கொடுப்பதா? ஸ்ரேயாஸ் ஐயரை கடுமையாக விமர்சித்த சேவாக்

இது குறித்துப் பேசிய அஸ்வின், "சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி தொடக்க வீரர்களாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சஞ்சு உலகக்கோப்பையிலும் நன்றாக விளையாடினார். இவர்களில் ஒருவரை வெளியே உட்கார வைத்துவிட்டு வைபவ் சூர்யவன்ஷியை விளையாட வைத்தால், இதில் எங்கே குழு விளையாட்டு இருக்கிறது? சிறப்பாக விளையாடிய வீரர்களை நமது சூழ்நிலைக்காகக் குறை சொல்லக் கூடாது" என்று கூறினார்.

மேலும், வைபவ் சூர்யவன்ஷி மைதானத்திற்குள் தண்ணீர் கொண்டு வந்தது குறித்துப் பேசிய அஸ்வின், "அவர் வெளியே அமர்ந்து போட்டியைப் பார்ப்பதில் தவறில்லை. அவர் அணியின் மற்ற வீரர்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கட்டும். இதன் மூலம் அவர் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. ஒரு சிறந்த வீரர் ஒரே இரவில் உருவாகிவிடுவதில்லை." என்றார்.

மேலும், "வெளியே அமர்ந்து காத்திருப்பது வைபவ் சூர்யவன்ஷியை மேலும் வலுவாக்கும். சச்சின் டெண்டுல்கருக்கு நடந்தது போல, வைபவ் சூர்யவன்ஷி ஒருமுறை விளையாடத் தொடங்கினால் அணியில் இருந்து நீக்க முடியாத வீரராக மாறக்கூடும். ஆனால், அதற்கு முன்பு காத்திருக்கப் பழக வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார் அஸ்வின்.

Story first published: Saturday, June 27, 2026, 13:12 [IST]
Other articles published on Jun 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+