Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அசத்தல் பவுலிங்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வினுக்கு முதல் ரேங்க்! #Ashwin

துபாய்: டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

நேற்றுடன் முடிவடைந்த, நியூஸிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரனின் அசத்தல் பவுலிங் காரணம்.

Ravichandran Ashwin becomes No. 1 Test bowler in the world, again

3 டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் அஸ்வின். கடைசி டெஸ்டில் இரு இன்னிங்சுகளிலும் சேர்த்து 13 விக்கெட்டுகளை அள்ளினார் அவர்.

அஸ்வினின் அசத்தல் பவுலிங்கால் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார் அஸ்வின். இந்தநிலையில், டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் 3வது இடத்தில் இருந்த அஸ்வின், 900 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். அஸ்வின் தனது டெஸ்ட் வரலாற்றில் பெற்ற அதிக பாயிண்ட் இதுவாகும். முன்னதாக ஜூலை மாதம் சிறிது காலம் முதலிடம் பிடித்த அஸ்வினிடமிருந்து, தென் ஆப்பிரிக்க பவுலர் ஸ்டெயின் அந்த இடத்தை தட்டிச் சென்றிருந்தார்.

ஸ்டெயின், 878 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இங்கிலாந்தின் ஆண்டர்சன் 870 புள்ளிகளுடன், 3வது இடத்திலும் உள்ளனர். 7வது இடத்தில் 805 புள்ளிகளுடன், மற்றொரு இந்திய ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜா உள்ளார். மொத்தம், 39 டெஸ்ட் போட்டிகளில் 220 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் அஸ்வின்.

Story first published: Wednesday, October 12, 2016, 13:56 [IST]
Other articles published on Oct 12, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+