Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர். அஸ்வின் 2வது முறையாக அப்பா ஆனார்... மனைவி பிரீத்திக்கு பெண் குழந்தை பிறந்தது!

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துப் புயல் ஆர். அஸ்வினின் மனைவி பிரீத்திக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை 21ம் தேதியே பிறந்து விட்டது. இருப்பினும் 6 நாள் கழித்து தற்போதுதான் பிரீத்தி அஸ்வின் தகவலை வெளியிட்டுள்ளார்.

அந்த சமயத்தில் தமிழகத்தில் வர்தா புயல் தாக்கம் இருந்ததாலும், தொடர்ந்து அஸ்வின் கிரிக்கெட்டில் பிசியாக இருந்ததாலும் செய்தியை தாமதமாக அறிவிக்க நேரிட்டதாக பிரீத்தி கூறியுள்ளார்.

2016ம் ஆண்டின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக கலக்கலாக வருடத்தை முடிக்கும் அஸ்வினுக்கு சிறந்த பரிசாக அவரது குழந்தை வந்து சேர்ந்துள்ளது. இது அஸ்வின்- பிரீத்தி தம்பதிக்கு 2வது குழந்தையாகும்.

இங்கிலாந்தை வீழ்த்தியபோது

சென்னையில் வைத்து இங்கிலாந்து அணியை இந்தியா 5வது டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய அடுத்த நாள் அதாவது டிசம்பர் 21ம் தேதி பிரீத்திக்கு குழந்தை பிறந்துள்ளது.

கேரம் பேபி

இதுகுறித்து பிரீத்தி வெளியிட்டுள்ள டிவீட்டில் 21ம் தேதி எனக்கு கேரம் பேபி 2 பிறந்தது. புயல் காரணமாக சென்னையே முடங்கிப் போயிருந்த நிலையில் சற்று தாமதித்து சேப்பாக்கத்தில் 5 நாள் கிரிக்கெட் முடிந்த நிலையில் எனது மகள் பிறந்தாள் என்று கூறியுள்ளார்.

அப்பாவின் தருணத்தை திருட விரும்பவில்லை

அப்பாவின் தருணத்தை திருட விரும்பவில்லை

டெஸ்ட் போட்டி முடிந்த அடுத்த நாள் பிறந்தநாள். அப்பாவின் (அஸ்வினின்) "கிரிக்கெட்டர் ஆப் தி இயர்" தருணத்தை பங்கு போட விரும்பாமல் இப்போது அனைவருக்கும் செய்தியை சொல்கிறோம் என்று இன்னொரு டிவீட்டில் தெரிவித்துள்ளார் பிரீத்தி.

பனிக்குடம் உடைந்து விடுமோ என நினைத்தேன்

இன்னொரு டிவீட்டில், நாம் போட்டியில் வென்றபோது நான் மைதானத்தில்தான் இருந்தேன். அப்போது எனக்கு வலி வந்தது. பனிக்குடம் உடைந்து எங்கே குழந்தை சேப்பாக்கத்திலேயே பிறந்து விடுமோ என்று கூட நினைத்தேன். அப்படி நடந்திருந்தால் அது பெரிய செய்தியாகியிருக்கும் என்றும் கூறியுள்ளார் பிரீத்தி.

ஸ்பெஷல் வருஷம்

ஸ்பெஷல் வருஷம்

அஸ்வினுக்கு 2016ம் ஆண்டு மறக்க முடியாததாக மாறியுள்ளது. இந்த ஆண்டில்தான் அவர் ஐசிசி கிரிக்கெட்டர் ஆப் தி இயர் மற்றும் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டர் ஆப் தி இயர் விருதுகளை வென்றுள்ளார். மேலும் உலக அளவில் அவர்தான் தற்போது நம்பர் 1 பந்து வீச்சாளராக உள்ளார். இந்த ஆண்டில் 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 72 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். தற்போது 2வது முறையாக அவர் அப்பா ஆகியுள்ளார்.

Story first published: Tuesday, December 27, 2016, 11:04 [IST]
Other articles published on Dec 27, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+