Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஜெயிக்கனும்னு கட்டாயம் கிடையாதே” இந்திய அணியின் தோல்வி குறித்த விமர்சனங்கள்.. அஸ்வின் தரமான பதிலடி

மும்பை: ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வரும் சூழலில் அதற்கெல்லாம் சீனியர் வீரர் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

சொந்த மண்ணில் மிகவும் பலமான அணியாக பார்க்கப்படும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் படு மோசமாக சொதப்பியதால் பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வருகின்றது.

குவியும் விமர்சனங்கள்

குவியும் விமர்சனங்கள்

இந்திய அணியின் தோல்விக்கு முதல் காரணமாக கேப்டன்சி மாற்றம் பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையிலும், அடுத்த 2 போட்டிகளில் ரோகித் சர்மாவின் தலைமையிலும் வீரர்கள் விளையாடியதால் குழப்பமடைந்து தோற்றுவிட்டனர் எனக்கூறப்படுகிறது. மற்றொருபுறம் இந்திய பேட்டிங் வரிசையில் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா உள்ளிட்டோர் சொதப்பியதே தோல்விக்கான காரணம் என விமர்சனங்கள் எழுகின்றன.

அஸ்வினின் பதிலடி

அஸ்வினின் பதிலடி

இந்நிலையில் இதற்கெல்லாம் ரவிச்சந்திரன் அஸ்வின் பதில் கொடுத்துள்ளார். அதில், இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயம் இங்கு உள்ளது. ஆனால் அது நியாயமே கிடையாது. இந்தியா பலமான அணி எனக்கூறுகின்றனர். அதில் சந்தேகம் இல்லை தான், ஆனால் அதற்காக தோல்வியே இருக்கக்கூடாதா?. சில சமயங்களில் ரசிகர்கள் கூறும் கருத்துக்கள் கடுமையானதாக உள்ளது.

புரிந்துக்கொள்ள வேண்டும்

புரிந்துக்கொள்ள வேண்டும்

வல்லுநர்களும் புரிந்துக்கொள்ளாமல் சில சமயம் கடுமையாக பேசிவிடுகின்றனர். 2011 உலகக்கோப்பையை வென்ற போது இந்திய அணியில் ஒரு நிலையான தன்மை இருந்தது. தற்போது அந்த நிலையை உருவாக்கதான் பணிகள் நடந்து வருகின்றன. அதற்கான கால அவகாசம் என்னவென்பதை வல்லுநர்கள் அறிவார்கள். அவர்களும் கிரிக்கெட் போட்டிகளை விளையாடி தான் உள்ளனர். எனவே அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

 ஐபிஎல்-ன் தாக்கம்

ஐபிஎல்-ன் தாக்கம்

இந்திய அணி வீரர்கள் அடுத்தபடியாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஐசிசி உலகக்கோப்பை தொடர் என 2 சாம்பியன் பட்டங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு இடையே 2 மாதங்களுக்கு ஐபிஎல் தொடர் வருவதால், வீரர்களின் பணிச்சுமை எப்படி இருக்கப்போகிறது? யாரெல்லாம் அந்த சமயத்தில் ஃபார்முடன் இருப்பார்கள் என்ற கேள்விகள் தான் உலா வருகிறது.

Story first published: Saturday, March 25, 2023, 10:07 [IST]
Other articles published on Mar 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+