Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு.. பாகிஸ்தானை வீழ்த்த முக்கிய ஆயுதம்.. எப்படி தெரியுமா??

மெல்பேர்ன்: பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மெகா வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வரும் அக்டோபர் 23ம் தேதி மோதுகிறது.

இந்த போட்டி மெல்பேர்ன் மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் பயிற்சி

இந்திய அணியின் பயிற்சி

கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் பெற்ற தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக மெல்பேர்ன் சென்றடைந்த இந்திய அணி வீரர்கள் அங்கு தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சாஹீன் அஃப்ரிடியின் பவுலிங்கை சமாளிக்க விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் த்ரோ டவுன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அஸ்வின் முக்கிய ஆயுதம்

அஸ்வின் முக்கிய ஆயுதம்

இந்நிலையில் பாகிஸ்தானை வீழ்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் தான் முக்கிய ஆயுதமாக இருக்கப்போகிறார். இந்திய அணியில் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான யுவேந்திர சாஹல் நீக்கப்பட்டு, அஸ்வின் தான் சேர்க்கப்படுவிருக்கிறார். மற்றொரு ஸ்பின்னரின் இடத்திற்கு இடதுகை வீரர் அக்‌ஷர் பட்டேல் தான் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இடதுகை வீரர்கள்

இடதுகை வீரர்கள்

பாகிஸ்தான் அணியில் 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாக ப்ளேயிங் 11ல் இடம்பெறுவார்கள். அதுவும் டாப் ஆர்டரிலேயே களமிறங்கி அச்சுறுத்தலாக இருப்பார்கள். இடதுகை பேட்ஸ்மேன்களை திணறடிப்பதில் அஸ்வின் புகழ்பெற்றவர். எனவே சாஹலுக்கு மாற்றாக அஸ்வினை சேர்த்து ராகுல் டிராவிட் திட்டம் போட்டுள்ளார்.

கடைசி கட்ட வாய்ப்பு

கடைசி கட்ட வாய்ப்பு

இந்திய அணியில் சரிவர வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வரும் அஸ்வின், விக்கெட் எடுப்பதை விட ரன்களை கட்டுப்படுத்துவதில் தான் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. அவர் இந்த போட்டியை பயன்படுத்தி விக்கெட்டை எடுத்தால், அவர் இனி அணிக்குள் நல்ல கம்பேக் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, October 21, 2022, 22:57 [IST]
Other articles published on Oct 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+