Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதயத்தை நொறுக்கும் செய்தி.. மனமுடைந்த வீரர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே இந்திய வீரர் அஸ்வின் தான்!

சென்னை : ரவிச்சந்திரன் அஸ்வின் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு நேர்ந்த மோசமான நிலையை கண்டு தன் வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் லண்டனில் நடைபெற்ற நிர்வாகக் கூட்டத்தில் ஜிம்பாப்வே அணியை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தடை செய்ய அதிரடியாக முடிவு எடுத்தது.

அதனால், அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் அதிர்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தினர்.

திடீர் முடிவு அல்ல

திடீர் முடிவு அல்ல

ஐசிசி ஏன் திடீரென ஜிம்பாப்வே அணியை தடை செய்தது? இது திடீர் என்று எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கடந்த சில வருடங்களாகவே ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டில் அந்த அரசு தலையீடு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

ஜிம்பாப்வே தடை

ஜிம்பாப்வே தடை

பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் ஜிம்பாப்வே அணியை மீட்கும் வேலைகளில் ஐசிசி இறங்கியது. எனினும், அடுத்து நடக்கவிருந்த கிரிக்கெட் போர்டு தேர்தலில் அரசியல் தலையீடு இருந்ததால், ஐசிசி அதிரடி முடிவாக அந்த அணியை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தடை செய்தது.

அதிர்ச்சியில் வீரர்கள்

இதனால், ஜிம்பாப்வே அணி வீரர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர். ஏற்கனவே, கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது ஜிம்பாப்வே கிரிக்கெட். மேலும், அந்த அணியில் அரசியல் தலையீடு காரணமாக கடந்த 15 வருடங்களில் மொத்தமாக அணியின் பலம் சிதைந்து விட்டது. தற்போது தடையும் விதிக்கப்பட்டுள்ளதால், வீரர்கள் மனமுடைந்து இருக்கிறார்கள்.

அஸ்வின் வருத்தம்

அஸ்வின் வருத்தம்

அவர்கள் பதிவை கண்ட அஸ்வின் வருத்தம் அடைந்து ஆறுதல் கூறி பதிவிட்டுள்ளார். இந்திய வீரர்களில் ஜிம்பாப்வே வீரர்களுக்காக ஆறுதல் தெரிவித்து பதிவிட்ட ஒரே வீரர் அஸ்வின் மட்டுமே.

அஸ்வின் பதிவு

"ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு உண்மையிலேயே இதயத்தை நொறுக்கும் செய்தி. சிக்கந்தர் ராசாவின் பதிவை பார்க்கும் போது, வீரர்களின் வாழ்வு எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என புரிகிறது. அந்த அழகான கிரிக்கெட் நாடு விரைவில் மீள வேண்டும் என பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார் அஸ்வின்.

இனி என்ன செய்வது?

இனி என்ன செய்வது?

ஜிம்பாப்வே அணி அடுத்த மூன்று மாதங்களுக்குள் அரசின் தலையீடு இல்லாமல் தேர்தல் நடத்தி ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு நிர்வாகத்தை தேர்வு செய்ய வேண்டும். அப்படி நடந்தால், ஐசிசி தடையை நீக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Friday, July 19, 2019, 21:32 [IST]
Other articles published on Jul 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+