For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித், ராகுல் மீது அஸ்வின் மறைமுக தாக்கு.. என்னங்க இப்படி சொல்லிட்டீங்க..இதனால்தான் இந்தியா தோற்றதா

சென்னை: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோற்றதற்கு இந்தியாவின் ஓப்பனிங் ஜோடியே காரணம் என ரவிச்சந்திரன் அஸ்வின் மறைமுகமாக சாடியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறி 2 வாரங்கள் ஆகிவிட்டது. எனினும் இந்தியா மீதான விமர்சனங்கள் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை.

இந்திய அணியில் ரோகித் சர்மாவின் கேப்டன்சியை மாற்ற வேண்டும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை மாற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

அஸ்வின் பேச்சு

அஸ்வின் பேச்சு

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்று ஆடிய ரவிச்சந்திரன் அஸ்வினே தற்போது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், டி20 கிரிக்கெட் என வரும்போது, வெற்றி தோல்விகள் மிகவும் சிறிய ரன் வித்தியாசத்தில் தான் இருக்கும். ஒரே ஒரு பந்தில் தோற்கலாம் அல்லது ஒரே ஒரு பந்தில் வெற்றி பெறலாம். இதனை விட முக்கியமான ஒன்று பவர் ப்ளே.

பவர் ப்ளே முக்கியம்

பவர் ப்ளே முக்கியம்

நிறைய போட்டிகளின் முடிவு பவர் ப்ளேவிலேயே தெரிந்துவிடும். ஒரு அணி பவர் ப்ளேவின் முடிவில் 30 ரன்கள் அடித்து, எதிரணி 60 ரன்களை அடித்தால் அங்கேயே ஆட்டம் முடிந்தது. ஆனால் பவர் ப்ளே தான் ஆட்டத்தை தீர்மானிக்கிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மையாக உள்ளது. பரிசோதனை செய்து பார்ப்பதற்கு டி20 கிரிக்கெட்டில் நிறைய இடங்கள் உள்ளன. ஆனால் முக்கியமான போட்டிகளில் நம் பலத்தை அறிந்து முழுமையாக அதனை செய்ய வேண்டும் என அஸ்வின் கூறியுள்ளார்.

மறைமுக குற்றச்சாட்டு

மறைமுக குற்றச்சாட்டு

இவை அனைத்துமே இந்திய ஓப்பனர்கள் ரோகித் - கே.எல்.ராகுலை குறிக்கின்றன. இந்த தொடரின் பவர் ப்ளேவின் மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் இருந்த 4வது அணி இந்தியா ஆகும் (95.85 ). 9 பந்துகளுக்கு ஒரு பவுண்டரி தான் சென்றுள்ளது. அதாவது ரோகித் , கே.எல்.ராகுல் ஆகியோர் ஒரு பந்திற்கு ஒரு ரன்னிற்கும் குறைவாக அடித்துள்ளனர்.

மோசமான புள்ளிவிவரம்

மோசமான புள்ளிவிவரம்

ரோகித் - கே.எல்.ராகுல் ஜோடி மொத்தமாக 6 போட்டிகளில் 88 ரன்களை மட்டுமே அடித்தனர். அவர்களின் சராசரி பார்ட்னர்ஷிப் 14.66 ரன்கள் மட்டுமே ஆகும். அரையிறுதியில் இந்தியா 38/ 1 என இருக்க, இங்கிலாந்து அணி 66/1 என வலுவான நிலையில் இருந்தது. இதனை தான் அஸ்வின் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

Story first published: Wednesday, November 23, 2022, 15:22 [IST]
Other articles published on Nov 23, 2022
English summary
Spinner Ravichandran Ashwin indirectly Mentions Rohit, rahul for Team India's Loss in t20 world cup 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+