Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் வீரருடன் இணைந்து ஆடப் போகும் அஸ்வின்.. அமெரிக்காவின் MLC டி20 தொடரில் பங்கேற்க ஒப்பந்தம்

சென்னை: இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், அமெரிக்காவில் நடைபெறவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்காக அவர் விளையாட உள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் இந்த டி20 தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முதல் இந்திய சர்வதேச வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.

அஸ்வின் கடந்த 2024 டிசம்பரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், 2025-ல் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற்றார். ஐபிஎல் தொடருக்குப் பிறகு அவர் விளையாடும் முதல் வெளிநாட்டு லீக் தொடர் இதுவாகும். முன்னதாக ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் தொடரில் விளையாட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஆனால் முழங்கால் காயம் காரணமாக அவரால் அதில் பங்கேற்க முடியவில்லை. இப்போது 2026 மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் அவர் களம் இறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Ravichandran Ashwin Joins San Francisco Unicorns in MLC 2026 To Play Alongside Haris Rauf

இந்தத் தொடரில் அஸ்வின், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃபுடன் இணைந்து ஒரே அணியில் விளையாடப் போவதுதான் கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. ஹாரிஸ் ராஃப் தவிர, ஹம்மாத் ஆசம் மற்றும் ஹசன் கான் ஆகிய பாகிஸ்தான் வம்சாவளி வீரர்களும் இதே சான் பிரான்சிஸ்கோ அணியில் உள்ளனர். ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸும் இதே அணியில்தான் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கிளை நிறுவனமான சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி, பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதுவை வாங்கியபோது அதற்குச் சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்தச் சூழலில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரமான அஸ்வின் நேரடியாகப் பாகிஸ்தான் வீரருடன் இணைந்து விளையாட முடிவு செய்துள்ளது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இது குறித்துப் பேசிய அஸ்வின், "மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் உலகத்தரம் வாய்ந்த வீரர்களைக் கொண்டு மிகச்சிறப்பாக வளர்ந்து வருகிறது. சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். இந்தத் தொடரில் விளையாடும் முதல் இந்திய சர்வதேச வீரர் என்ற பொறுப்பை நான் உணர்ந்துள்ளேன். அணியை முதல் முறையாகச் சாம்பியன் ஆக்குவதே எனது முக்கிய இலக்கு" என்று தெரிவித்துள்ளார். மேட் ஷார்ட் தலைமையிலான இந்த அணியில் ஃபின் ஆலன், சேவியர் பார்ட்லெட் போன்ற முன்னணி வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். அஸ்வினின் இந்த புதிய பயணம் அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Sunday, March 29, 2026, 8:10 [IST]
Other articles published on Mar 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+