Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, ரோகித்தைவிட அவர் முக்கியமா?.. இந்திய அணியின் முதுகெலும்பு அவர் தான்.. அஸ்வின் சுவாரஸ்ய கருத்து

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை விட மற்றொரு வீரர் தான் இந்திய அணிக்கு முதுகெலும்பாக செயல்படுவார் என்பது போல அஸ்வின் கூறியுள்ளார்.

இரு அணிகளும் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9ம் தேதியன்று நாக்பூரில் தொடங்கவுள்ளது. இதுதான் கடைசி பார்டர் கவாஸ்கர் கோப்பை என்பதால் ரசிகர்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியாவை பழிவாங்க வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவுக்கு இதுதான் கடைசி வாய்ப்பாகும். ஏனென்றால் இதற்கு முன் நடந்த 3 டெஸ்ட் தொடர்களிலும் இந்தியாவிடம் தோல்வியை தழுவியுள்ளது.

ஆஸ்திரேலிய டெஸ்ட்

ஆஸ்திரேலிய டெஸ்ட்

இந்தியாவுக்கு சொந்த மண்ணில் விளையாடுவது சாதகமானது என்றாலும், நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் இல்லாதது பின்னடைவாக உள்ளது. எப்படிபட்ட களம் என்பதையெல்லாம் பொருட்படுத்தாத ரிஷப் பண்ட், அதிரடியாக ரன் குவிப்பார். குறிப்பாக அவரை 2வது இன்னிங்ஸ் ஸ்பெஷலிஸ்ட் என்றே வல்லுநர்கள் கூறி வருகின்றனர். விபத்து காரணமாக இந்த முறை அவர் மிஸ்ஸாகியுள்ளார்

பண்ட்-க்கு மாற்று யார்?

பண்ட்-க்கு மாற்று யார்?

ரிஷப் பண்ட்-க்கு மாற்றாக கே.எஸ்.பரத், இஷான் கிஷான் போன்ற இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும் பண்ட்-ன் இடத்தை பூர்த்தி செய்து இந்தியாவுக்கு உறுதுணையாக விராட் கோலி இருப்பார் என பலரும் கூறி வருகின்றனர். அதற்கேற்றார் போல அவரும் டி20 மற்றும் 50 ஓவர் கிரிக்கெட் தொடரை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கம்பேக் தரும் முணைப்புடன் உள்ளார்.

அஸ்வினின் கருத்து

அஸ்வினின் கருத்து

இந்நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை விட ஸ்ரேயாஸ் ஐயர் தான் முக்கிய வீரராக இருப்பார் அஸ்வின் வித்தியாசமான கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடந்த சில வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் உடன் அதிகப்போட்டியில் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தான். அப்படி இருந்துமே அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என நினைக்கிறேன்.

ஸ்ரேயாஸின் காயம்

ஸ்ரேயாஸின் காயம்

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் முதுகெலும்பாக இருந்து வருவது ஸ்ரேயாஸ் ஐயர் தான். பண்ட் இல்லாத சமயத்தில் அவர்தான் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நினைக்கிறேன். அவருக்கு தற்போது முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார். எனினும் பொறுத்திருந்து பார்க்கலாம் என்பது போல அஸ்வின் பேசியுள்ளார்.

புள்ளிவிவரம்

புள்ளிவிவரம்

முதுகு பிரச்சினை காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து முழுவதுமாக விலகிய ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்டிலும் விளையாட மாட்டார் எனக்கூறப்பட்டுள்ளது. 2 வாரத்தில் உடல்நிலை முன்னேறிவிடும் என்பதால் 2வது டெஸ்டிற்கு வந்துவிடுவார் எனத்தெரிகிறது. 2021ல் அறிமுகமான அவர் 7 டெஸ்ட் போட்டிகளில் 634 ரன்களை குவித்துள்ளார். அவரின் சராசரி 56.73 ரன்களை வைத்துள்ளார்.

Story first published: Saturday, February 4, 2023, 8:31 [IST]
Other articles published on Feb 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+