Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மலைக்க வைக்கும் அஸ்வின் சொத்து மதிப்பு.. 2 சொகுசு கார்.. பல கோடி பங்களா.. ஐபிஎல்-இல் ஜாக்பாட்

சென்னை : இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சொத்து மதிப்பு சுமார் 200 கோடியை தாண்டி உள்ளது.

இரண்டு சொகுசு கார்கள் வைத்துள்ளார். சென்னையில் தனக்கு சொந்தமான ஒரு டிசைனர் பங்களாவில் வசித்து வருகிறார். அது மட்டுமின்றி பல நகரங்களில் அவருக்கு சொத்து உள்ளது.

Ravichandran Ashwin Networth - He owns a luxury house and two highly priced cars

தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவதன் மூலமும், ஐபிஎல் தொடரில் ஆடி வருவதன் மூலமும் ஒவ்வொரு ஆண்டும் பல கோடிகளை சம்பாதித்து வருகிறார். அதைத் தவிர அவ்வப்போது விளம்பரங்களில் நடித்து வருகிறார் ஒரு பிராண்ட்டின் தூதராக இருக்க அவருக்கு பெரும் தொகை அளிக்கப்படுகிறது.

2008 முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறார். 2010ஆம் ஆண்டு அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். 2010 முதல் தொடர்ந்து இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற்று வருகிறார்.

தற்போது பிசிசிஐ கிரேட் ஏ ஒப்பந்தத்தில் அஸ்வின் இடம் பெற்று இருக்கிறார். அதன் மூலம் அவருக்கு ஆண்டுக்கு 5 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. இதைத் தவிர அஸ்வின் ஆடும் ஒவ்வொரு சர்வதேச போட்டிக்கும் பிசிசிஐ அவருக்கு சில லட்சங்கள் சம்பளம் அளிக்கிறது. தற்போது அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியில் 5 கோடி சம்பளம் பெற்று வருகிறார். ஆக, பிசிசிஐ மற்றும் ஐபிஎல் மூலம் மட்டுமே அவருக்கு ஆண்டுக்கு 10 கோடிக்கும் அதிகமான தொகை கிடைக்கிறது.

தற்போது அவரின் சொத்து மதிப்பை பார்க்கலாம். 2008 முதல் 2023 வரை அஸ்வின் பெற்ற ஐபிஎல் சம்பளம் ரூ.82.49 கோடி ஆகும். பிசிசிஐ-யில் இதுவரை பல்வேறு ஒப்பந்தங்களில் அஸ்வின் இருந்த நிலையில், இத்தனை ஆண்டுகளில் அவர் 40 கோடிக்கும் அதிகமாக ஒப்பந்தம் மற்றும் போட்டி சம்பளம் மூலம் சம்பாதித்து இருக்கிறார். இதைத் தவிர விளம்பரங்கள் மூலம் சுமார் 10 கோடி வரை சம்பாதித்து இருக்கலாம் என கருதப்படுகிறது. Myntra, Manna Foods, Ramraj Linen Cloths உள்ளிட்ட சில நிறுவனங்களின் பிராண்ட் தூதராக இருக்கிறார் அஸ்வின்.

சென்னையில் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்று உள்ளது. அவரிடம் இரண்டு சொகுசு கார்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒன்று சுமார் 89 லட்சம் மதிப்பு கொண்ட ஆடி கியூ 7 (Audi Q7). மற்றொன்று ரோல்ஸ் ராய்ஸ் கார். ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் ஆரம்ப விலையே 5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தவிர அஸ்வினுக்கு பல்வேறு வியாபாரம் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் இருக்கலாம். அது குறித்த விவரம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆக மொத்தம் அஸ்வினின் நிகர சொத்து மதிப்பு 200 கோடிக்கு அதிகமாக இருக்கக் கூடும்.

Story first published: Sunday, December 31, 2023, 18:49 [IST]
Other articles published on Dec 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+