டெஸ்ட் போட்டி பவுலர்களில் அஸ்வினுக்கு 8வது ரேங்க்! ஆல்-ரவுண்டர்களில் நம்பர்-2
துபாய்: டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின் 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதேநேரம், பேட்ஸ்மேன் கோஹ்லி முதல் பத்து இடங்களுக்குள் வருவதை தவறவிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய ரேங்க் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தை பிடித்துக் கொண்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் இந்தியாவின் அஸ்வின் 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அதேபோல, பவுலிங்கில் 769 புள்ளிகளுடன் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மற்றொரு சுழற் பந்து வீச்சாளர், அமித்மிஸ்ரா 42 ரேங்க் முன்னேறி, 39வது இடத்தை பிடித்துள்ளார். மிஸ்ராவின் கிரிக்கெட் வாழ்க்கையில், இதுதான் அதிகபட்ச ரேங்காகும்.


Click it and Unblock the Notifications