Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முழுசா 4 ஓவர்கள் வீசலையா? அப்ப சம்பளத்தை கட் பண்ணுங்க.. கேமரூன் கிரீன் குறித்து அஸ்வின் அதிரடி

கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 25.20 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டவர் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன். முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பந்துவீசுவதில் சிக்கல் உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு அதிரடியான யோசனையைத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸலுக்குப் பதிலாக அந்த இடத்தை நிரப்பவே கேமரூன் கிரீனை கொல்கத்தா அணி வாங்கியது. அவர் சனிக்கிழமை கொல்கத்தா வந்தடைந்தார். ஆனால், காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு அவர் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ஓவர்கள் பந்துவீசவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவரது பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, ஐபிஎல் தொடரில் 4 ஓவர்கள் முழுமையாக வீச அனுமதிக்காது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Ravichandran Ashwin Proposes Salary Cut for Cameron Green KKR s 25 Crore Star Facing Bowling Workload Concerns

சம்பளத்தை குறைக்க வேண்டும்

இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், ஒரு வீரர் கடைசி நேரத்தில் பந்துவீச மறுத்தால் அவரது சம்பளத்தில் இருந்து தொகையை பிடித்தம் செய்ய வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அவர் பேசுகையில், "கேமரூன் கிரீன் ஒவ்வொரு போட்டியிலும் 4 ஓவர்கள் வீச ஆஸ்திரேலிய வாரியம் அனுமதிக்குமா என்பது மிகப்பெரிய கேள்வி. அவர்கள் தங்களது வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஏலத்தின் போது ஒரு வீரர் 4 ஓவர்கள் வீசுவார் என்று நம்பித்தான் அணிகள் அதிக விலை கொடுத்து அவரை வாங்குகின்றன. ஆனால் அவர் 1 அல்லது 2 ஓவர்கள் தான் வீசுவேன் என்று கூறினால், ஐபிஎல் நிர்வாகம் அந்த வீரரின் ஒப்பந்தத் தொகையிலிருந்து 2 கோடி ரூபாயைக் குறைக்கும் உரிமையை அணிக்கு வழங்க வேண்டும். ஷாருக்கான் 25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய வீரர் 1 ஓவர் தான் வீசுவேன் என்று கூறினால் நிர்வாகத்திற்கு எப்படி இருக்கும்?" என்று அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொல்கத்தா அணியின் சவால்

மேலும், தற்போது மோசமான ஃபார்மில் இருக்கும் கேமரூன் கிரீனிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவது கொல்கத்தா அணி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 28 அன்று ஐபிஎல் தொடர் தொடங்கும் நிலையில், கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் மார்ச் 29 அன்று மும்பை இந்தியன்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் கேமரூன் கிரீன் எப்படிச் செயல்படுவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, March 21, 2026, 22:24 [IST]
Other articles published on Mar 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+