Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேட்கவே காமெடியாக இல்லையா??.. யூடியூப் வீடியோவால் பரவிய குற்றச்சாட்டுக்கள்.. அஸ்வின் பதிலடி!

மும்பை: அஸ்வினின் யூடியூப் வீடியோக்களை பார்த்து தான் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுத்தது என்ற விமர்சனங்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை சமீபத்தில் முடிவடைந்தது. 4 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

முதல் 2 போட்டிகளில் இந்திய அணி முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றி கண்டது. ஆனால் 3வது போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் திடீரென கம்பேக் கொடுத்தனர். இதனால் இந்தியா தோல்வியடைந்தது. இதே போல 4வது டெஸ்ட் போட்டியிலும் சவால் கொடுத்தனர்.

 ஆஸ்திரேலியாவின் கம்பேக்

ஆஸ்திரேலியாவின் கம்பேக்

ஆஸ்திரேலியாவின் இந்த அட்டகாசமான கம்பேக்கிற்கு அஸ்வின் தான் காரணம் என்ற விமர்சனங்கள் இருந்தது. அதாவது முதல் 2 வெற்றிகளுக்கு பிறகு அஸ்வின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் சுழலுக்கு ஏற்ற களங்களில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது குறித்து பேசியிருந்தார். இந்த வீடியோவை பார்த்த பின்னர் தான் ஆஸ்திரேலிய வீரர்கள் சரியாக பேட்டிங் செய்து ரன் குவித்ததாக விமர்சனங்கள் குவிந்தன.

அஸ்வின் பதிலடி

அஸ்வின் பதிலடி

இந்நிலையில் அதற்கெல்லாம் அஸ்வின் பதில் கொடுத்துள்ளார். அதில், நான் அந்த வீடியோவில் தடுப்பாட்டத்தை நம்ப வேண்டும், பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது போன்ற அடிப்படை விஷயங்களை தான் கூறியிருந்தேன். ஆனால் அதனை பார்த்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடினார்கள் என்பது நகைச்சுவையாக இருக்கிறது.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்தியாவில் பல ஆண்டுகளாக விளையாடி வரும் நாங்கள், ராகுல் டிராவிட் போன்ற ஒருவரின் பயிற்சிக்கு பின்னர் போட்டிக்கு செல்கிறோம். இதே போல ஆஸ்திரேலிய அணியில் ஆண்ட்ரூவ் மெக்டொனால்ட் பயிற்சியின் கீழ் அந்த வீரர்கள் பயிற்சி பெற்ற பின் வருகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக விளையாடி, ஒரு பயிற்சியாளர் சொல்லி தராததை எனது வீடியோ கற்றுக்கொடுத்துவிட்டதாக கூறுகிறீர்களா? என்னை நினைத்து பெருமையாக இருக்கிறதே எனக்கூறினார்.

தீயாய் பரவுகிறது

தீயாய் பரவுகிறது

ஒரு வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ளலாம் என்றால் இனி ஒவ்வொரு அணிக்கும் பயிற்சியாளர்கள் என தனியாக ஒருவர் எதற்காக வேண்டும். நாம் சமூக வலைதளங்கள் வளர்ந்துவிட்ட சூழலில் இருக்கிறோம். இப்படி கூறும் வேடிக்கையான விஷயங்கள் கூட காட்டுத்தீ போல பரவி விடுகிறது என அஸ்வின் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையே அடுத்ததாக ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 15, 2023, 18:05 [IST]
Other articles published on Mar 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+