Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திருப்பி கொடுக்கனும்லா.. கிண்டல் செய்த அயல்நாட்டு வீரர்கள்.. மறக்க முடியாத பதிலடி கொடுத்த அஸ்வின்!

முதல் இன்னிங்ஸில் கிண்டல் செய்த அயல்நாட்டு வீரர்களுக்கு 2வது இன்னிங்ஸிலேயே பதிலடி கொடுத்து மிரட்டியுள்ளார் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

Recommended Video

Ravichandran Ashwinனின் 6/27! 2nd Inningsல் Somerset Batting காலி | OneIndia Tamil

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை நடைபெறவுள்ளது.

இதற்கு தாயாராகும் விதமாக, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது இங்கிலாந்தின் உள்ளூர் தொடரான கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

சொதப்பல் ஆட்டம்

சொதப்பல் ஆட்டம்

லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் சாமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் சர்ரே அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வருகிறார். சர்வதேச அணிக்காக விளையாடி வரும் அஸ்வின் உள்ளூர் போட்டிகளில் விக்கெட்களை வாரிக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக நடந்தது. முதல் இன்னிங்ஸில் 43 ஓவர்களை வீசிய அஸ்வின் 99 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். அதுவும் இறுதியில் எடுத்தார்.

சொந்த அணியே கிண்டல்

சொந்த அணியே கிண்டல்

முதல் நாள் முதல் செஷனில் அஸ்வின் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இருந்தார். சொந்த அணி வீரர் என்றும் பாராத சர்ரே அணி, அஸ்வினின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இன்னும் விக்கெட் எடுக்கவில்லை என பதிவிட்டு சிரிக்கும் எமோஜியை போட்டு கிண்டலடித்தது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியது.

உடனடி பதிலடி

உடனடி பதிலடி

இந்நிலையில் ஆட்டத்தின் 2வது இன்னிங்ஸில் அனைத்து கிண்டல்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார் அஸ்வின். தொடக்கம் முதலே சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் எதிரணி பேட்டிங் வரிசையை சீட்டுக்கட்டு போல சரித்தார். முதல் இன்னின்ஸில் 43 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை எடுத்த அஸ்வின் 2வது இன்னிங்ஸில் வெறும் 15 ஓவர்களை மட்டுமே வீசி 6 விக்கெட்களை சாய்த்தார். மேலும் 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இந்திய ரசிகர்கள் நம்பிக்கை

இந்திய ரசிகர்கள் நம்பிக்கை

அஸ்வினின் கம்பேக்கை பார்த்து கிண்டல் செய்த சர்ரே அணி வீரர்கள் வாயடைந்து நின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் எடுக்கும் 49வது Fifth wicket haul ஆகும். அதே போல கவுண்டி போட்டிகளில் அஸ்வின் எடுக்கும் 7வது five wicket haul ஆகும். இங்கிலாந்து தொடருக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி இருப்பது இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

Story first published: Wednesday, July 14, 2021, 20:17 [IST]
Other articles published on Jul 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+