“ஒரே ஒரு வழிதான் உண்டு”.. கொரோனா பாதித்த அஸ்வினால் இங்கிலாந்து செல்ல முடியுமா?.. குழப்பத்திற்கு விடை
சென்னை: இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
Recommended Video
இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நீண்ட தொடரில் பங்கேற்கிறது.
இரு அணிகளுக்கும் இடையே ஒரு டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம்
இதற்காக ரோகித் சர்மா தலைமையில் 18 பேர் கொண்ட இந்திய அணி உருவாக்கப்பட்டுள்ளது. ஓய்வில் இருந்த ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் இங்கிலாந்து சென்றுவிட்டனர். தென்னாப்பிரிக்க தொடரில் இருந்த வீரர்களும், இங்கிலாந்து புறப்பட்டுவிட்டனர்.

அஸ்வின் செல்லவில்லை
இந்நிலையில் தான் ஒரே ஒருவரால் மட்டும் போக முடியாமல் போயுள்ளது. தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளதால், அவரால் இங்கிலாந்து செல்ல முடியாமல் போயுள்ளது.

வாய்ப்புள்ளதா?
கொரோனா பாதித்த போதும், அஸ்வினால் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க முடியும். அதாவது இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் வரும் ஜூலை 1ம் தேதிதான் நடைபெறுகிறது. அஸ்வின் அதிகபட்சமாக 7 நாட்கள் குவாரண்டைனில் குணமடைந்துவிட்டால் அவர் இங்கிலாந்துக்கு செல்ல மேலும் 3 நாட்கள் கூட அவகாசம் உள்ளது. ஆனால் அப்போதும் நெகட்டிவ் என்ற முடிவு வரவில்லை என்றால் டெஸ்ட் தொடரில் இருந்து விலக வேண்டியது தான்.

ப்ளேயிங் 11 சந்தேகம் தான்
எனினும் அவர் ப்ளேயிங் 11ல் இடம்பிடிப்பது சந்தேகம் தான். இந்தியா - இங்கிலாந்து இடையே ஜூன் 24ல் இருந்து பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்றால் தான் இங்கிலாந்து பிட்ச்-ன் தற்போதைய நிலை தெரியும். எனவே அஸ்வினால் இதில் கலந்துக்கொள்ள முடியாது என்பதால், ப்ளேயிங் 11ல் சேர்ப்பது கடினம் தான். எனினும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சேர்க்கலாம்.


Click it and Unblock the Notifications