Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அவங்க கஷ்டம் எனக்குதான் தெரியும்”.. டிராவிட் குறித்த ரவி சாஸ்திரியின் புகார்.. பதிலடி தந்த அஸ்வின்!

சென்னை: ராகுல் டிராவிட் குறித்து ரவி சாஸ்திரி வைத்த குற்றச்சாட்டுக்கு தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தரமான பதிலடியை கொடுத்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி, நேரடியாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

இரு அணிகளுக்கு இடையேயும் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டி மழையினால் ரத்தும் ஆகிவிட்டது.

டிராவிட்டின் ஓய்வு

டிராவிட்டின் ஓய்வு

இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இளம் படை களமிறங்குகிறது. இதே போல ராகுல் டிராவிட்டிற்கும் ஓய்வு தரப்பட்டுள்ளதால் தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் செயல்பட்டு வருகிறார்.

ரவிசாஸ்திரி விளக்கம்

ரவிசாஸ்திரி விளக்கம்

ஆனால் டிராவிட்டிற்கும் ஓய்வு தந்தது தான் ரவி சாஸ்திரிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அவர், பயிற்சியாளர்கள் ஓய்வெடுப்பது சரியல்ல, ஐபிஎல்-ன் போது 2 -3 மாதங்கள் ஓய்வு கிடைக்கிறதே?.. அது போதாதா?. அணியில் தொடர்ந்து இருந்துக்கொண்டே இருந்தால் வீரர்களை புரிந்துக்கொண்டு கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். எனவே டிராவிட் ஓய்வெடுத்திருக்க கூடாது என ரவி சாஸ்திரி கூறினார்.

அஸ்வின் தந்த விளக்கம்

அஸ்வின் தந்த விளக்கம்

இந்நிலையில் டிராவிட்டிற்கு ஆதரவாக ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ராகுல் டிராவிட் மற்றும் அணியினர் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக கடும் உழைப்பை போட்டனர். பல மாதங்களுக்கு முன் திட்டமிட்டதில் இருந்தே அவர்கள் உலகக்கோப்பையை மனதில் வைத்திருந்தனர். ஒவ்வொரு போட்டியின் மைதானம் மற்றும் எதிரணி குறித்து ஆராய்ந்துக்கொண்டே இருந்தனர். இதனால் மனதளவில் மட்டுமல்லாமல் உடலளவிலும் சோர்வடைந்துள்ளனர்.

வங்கதேச போட்டி

வங்கதேச போட்டி

இதனால் தான் நியூசிலாந்து தொடருக்கு வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் தலைமையில் பயிற்சியாளர் குழு சென்றுள்ளனர். இந்த தொடர் முடிந்த உடனேயே வங்கதேசத்துடனான 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. எனவே அதற்கு டிராவிட் திரும்புவார் என அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Saturday, November 19, 2022, 10:09 [IST]
Other articles published on Nov 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+