Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்பா சொன்ன வார்த்தை.. கதவை சாத்திக் கொண்டு அழுத அஸ்வின்.. உடைந்து போன தருணம்

சென்னை : இந்திய அணியின் மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதம் ஒன்றால் தான் பல நாட்கள் அறையை பூட்டிக் கொண்டு அழுததாக குறிப்பிட்டிருக்கிறார். தன்னால் கிரிக்கெட் சார்ந்த விஷயங்களை தன் குடும்ப உறுப்பினர்களிடம் சொல்ல முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அஸ்வின் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்து இருந்தார். மேலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தனது 100வது டெஸ்ட் போட்டியில் அவர் ஆடினார். இந்த நிலையில் அஸ்வின் தனது கிரிக்கெட் அனுபவம் குறித்து பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

Ravichandran Ashwin says he cried a lot after arguement with his father

அதில் ஒரு பேட்டியில் தனது தந்தைக்கும் தனக்கும் நடந்த வாக்குவாதத்தால் தான் மிகவும் மனமுடைந்து போனதாக குறிப்பிட்டார். ஒரு முறை இனி கிரிக்கெட் விளையாடுவதா அல்லது வேலைக்கு செல்வதா? என்ற கேள்வி அஸ்வினுக்கு வந்துள்ளது. அதே சமயத்தில் வீட்டில் ஒரு பிரச்சனை எழுந்தது. அப்போது அவரது தந்தையுடன் நடந்த வாக்குவாதத்தில் அவர் கூறிய வார்த்தைகள் அஸ்வினை காயப்படுத்தவே அவர் அறையில் தனிமையில் நீண்ட காலம் அதை நினைத்து அழுது கொண்டே இருந்ததாக குறிப்பிட்டார்.

"என் அப்பா ஒரு விஷயத்தை சொன்னார். என் வீட்டில் ஒரு பிரச்சனை வெடித்தது. நான் அப்போது என் தந்தையுடன் வாக்குவாதம் செய்தேன். அப்போது அவர் ஒரு வாக்கியத்தை கூறினார். "நீ மிகவும் நேர்மையாக இருக்கிறாய். அதனால் தான் உன்னால் எதையும் சரியாக செய்ய முடியவில்லை" என்றார். நான் பொதுவாக உணர்ச்சிவசப்படக் கூடிய நபர் இல்லை. ஆனால், அப்போது நான் அறையில் கதவை சாத்திக் கொண்டு அழுதேன். நீண்ட நாட்களுக்கு அழுதேன். என் அப்பா அப்படி சொல்வார் என நான் எதிர்பார்க்கவில்லை." என்றார் அஸ்வின்.

பின்னர் வேலைக்கு செல்வதா, கிரிக்கெட்டை தொடர்வதா? என்ற குழப்பத்தில் இருந்த போது மனநல ஆலோசகரை அணுகி தெளிவு பெற்றதாக குறிப்பிட்டார் அஸ்வின்.

Story first published: Monday, March 18, 2024, 12:18 [IST]
Other articles published on Mar 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+