Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ-யில் இருந்து முக்கிய நபர் வெளியேறியதால் உலகக்கோப்பையில் ஷமிக்கு வாய்ப்பு.. அஸ்வின் பேச்சு

சென்னை: இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் பதவியிலிருந்து அஜித் அகர்கர் விலகியதைத் தொடர்ந்து, முகமது ஷமிக்கு இந்திய அணியின் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு புவனேஸ்வர் குமார் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த பிறகு அறிவிக்கப்பட்ட முதல் அணி இதுவாகும்.

Ravichandran Ashwin says Mohammed Shami has more chance to return to Indian team after Ajit Agarkar exit

இந்நிலையில் தனது யூட்யூப் சேனலில் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி மீண்டும் அணியில் இடம் பிடிப்பது குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அஸ்வின் பேசுகையில், "இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் தற்போது மாற்றப்பட உள்ளார். அஜித் அகர்கர் இனி தேர்வுக்குழுவில் இல்லை. அவர் புதிய, இளம் வீரர்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார். ஆனால் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நேரங்களில் இந்திய வேகப்பந்து வீச்சு பலவீனமாக இருப்பதை அனைவரும் பார்க்க முடிகிறது. இதனால் பிசிசிஐ தற்போது மீண்டும் அனுபவ வீரர்களை நோக்கித் திரும்பியுள்ளது.

புவனேஸ்வர் குமார் தனது கடின உழைப்பால் தேர்வுக்குழுவின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. புவனேஸ்வர் உள்ளே வந்துவிட்டதால், முகமது ஷமிக்கான கதவுகள் இன்னும் மூடப்படவில்லை என்றே நான் கூறுவேன். அனுபவம் தேவைப்படும் இந்த நேரத்தில் ஷமியின் வருகை வெகுதொலைவில் இல்லை" என்று அஸ்வின் தெரிவித்தார்.

கைவிட்ட மும்பை இந்தியன்ஸ்.. சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்த கீரன் பொல்லார்ட்.. 16 ஆண்டு ஏல சம்பவம்

கைவிட்ட மும்பை இந்தியன்ஸ்.. சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்த கீரன் பொல்லார்ட்.. 16 ஆண்டு ஏல சம்பவம்

முகமது ஷமி கடைசியாக 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டும் அவரைத் தேர்வு செய்யாமல் இந்திய அணி நிர்வாகம் புறக்கணித்தது. 64 டெஸ்ட் போட்டிகளில் 229 விக்கெட்டுகளையும், 108 ஒருநாள் போட்டிகளில் 206 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள அனுபவ வீரரான ஷமிக்கு, புதிய தேர்வுக்குழுவின் கீழ் மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் அனுபவ பந்துவீச்சாளர் தேவை என்ற அடிப்படையில் ஷமி ஒருநாள் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது.

அஜித் அகர்கர் விலகியதும் ஜடேஜா போட்ட ஒற்றைப் பதிவு.. மூத்த வீரர்களின் குமுறல் அம்பலம்

Also Read

அஜித் அகர்கர் விலகியதும் ஜடேஜா போட்ட ஒற்றைப் பதிவு.. மூத்த வீரர்களின் குமுறல் அம்பலம்
Story first published: Thursday, October 8, 2026, 9:41 [IST]
Other articles published on Oct 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+