Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடேங்கப்பா.. 2வது டெஸ்டில் அஸ்வின் படைத்த 2 சூப்பர் சாதனை.. கபில் தேவ்-வையே முந்திட்டார் - எப்படி?

டாக்கா: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அணியை காப்பாற்றியது மட்டுமின்றி தானும் பெரிய சாதனை படைத்தார்.

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் டாக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மேலும் 2 போட்டிகள் கொண்ட தொடரை ஒயிட் வாஷ் செய்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 2 இன்னிங்ஸ்களிலையும் சேர்த்து மொத்தமாகவே 145 ரன்களை தான் இலக்காக நிர்ணயித்தது.

த்ரில் வெற்றி

த்ரில் வெற்றி

ஆனால் இந்த எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியை ரன்களை குவிக்கவே விடவில்லை வங்கதேச பவுலர்கள். ஓப்பனிங் வீரர்கள் (7) கேப்டன் கே.எல்.ராகுல் (2) என அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். இதன்பின்னர் வந்த புஜாரா (6), விராட் கோலி (1) என அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். நம்பிக்கை நாயகனான ரிஷப் பண்ட்-ம் வெறும் 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி ஒருகட்டத்தில் தோற்றுவிடும் என்ற அச்சம் எழுந்தது.

காப்பாற்றிய அஸ்வின்

காப்பாற்றிய அஸ்வின்

அப்போது ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி இந்தியாவை இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்றிக்கொண்டு வந்தனர். இந்தியாவுக்கு இன்னும் 71 ரன்கள் தேவை, ஆனால் 3 விக்கெட்கள் தான் உள்ளது என்ற போது, கடைசி நேரத்தில் அஸ்வின் மட்டும் 62 பந்துகளில் 42 ரன்களை அடித்து வெற்றியை தேடிக்கொடுத்தார். அவரும் ஸ்ரேயாஸ் ஐயரும் 71 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இதனையடுத்து அஸ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.

சூப்பர் சாதனை

சூப்பர் சாதனை

இந்நிலையில் இதில் சுவாரஸ்ய சாதனை ஒன்றை இதன் மூலம் அஸ்வின் படைத்துள்ளார். அதாவது ரவிச்சந்திரன் ஒரு டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்களும், 50 ரன்களும் அதிக முறை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். இதுவரை 9 முறை செய்துள்ளார். ரவீந்திர ஜடேஜா 8 முறையும், கபில் தேவ் 7 முறையும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

2வது ரெக்கார்ட்

2வது ரெக்கார்ட்

இதுமட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 400 விக்கெட்களை அதிவேகமாக எடுத்த வீரர்களில் அஸ்வின் 2வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் 83 இன்னிங்ஸுடன் ஹேட்லி முதலிடத்திலும், மூன்றாவது இடத்தில் பொல்லாக் (103), 4ஆவது இடத்தில் கபில் தேவ் (131) ஆகியோர் உள்ளனர்.

Story first published: Sunday, December 25, 2022, 22:35 [IST]
Other articles published on Dec 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+