Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை டூ மும்பை செல்வதற்குள் இவ்வளவு பிரச்னையா? விமான நிலையத்தில் சிக்கல்..அஸ்வினின் சுவாரஸ்ய பயணம்

மும்பை: சென்னையில் இருந்து மும்பை சென்றடைவதற்குள் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை கிரிக்கெட் வீரர் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Ashwinன் Chennai To Mumbai சுவாரஸ்ய பயணம் | OneIndia Tamil

இந்தியா - நியூசிலாந்து மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் வரும் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது. இதன் பின்னர் இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடரில் நடந்த கொரோனா பிரச்னை, இங்கிலாந்து சுற்றுபயணத்திலும் நடந்துவிடக்கூடாது என பிசிசிஐ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

இந்திய வீரர்கள் அனைவரும் வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்துக்கு தனி விமானம் மூலம் புறப்படுகின்றனர். அதற்கு முன்னதாக 14 நாட்கள் அவர்கள் குவாரண்டைனில் இருப்பதற்காக மும்பையில் பிசிசிஐ பயோ பபுள் ஏற்படுத்தியிருந்தது. இதற்காக கடந்த 19ம் தேதி இந்திய வீரர்கள் பபுளில் இணைந்தனர். சென்னை, ஐதராபாத், கொல்கத்தா என 3 இடங்களில் இருந்து தனிவிமானம் மூலம் வீரர்கள் மும்பை வந்தடைந்தனர். அதே போல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய வீராங்கனைகளும் வந்து மும்பை பபுளில் இணைந்தனர்.

கார் பயணம்

கார் பயணம்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், அனைத்து வீரர்களும் தற்போது மும்பையில் உள்ளோம் ஆனால் நாங்கள் பயணித்த விதம் மிகவும் வித்தியாசமானது. தென்னிந்தியாவை சேர்ந்த ( சென்னை, பெங்களூரு, ஐதராபாத்) வீரர்களுக்கு சென்னையில் இருந்து தனி விமானம் புறப்பட்டது. எனவே வேறு மாநில வீரர்கள் சென்னைக்கு காரில் பயணித்து வந்தனர். அவர்கள் நீண்ட தூரம் சுயமாக கார் ஓட்டி வந்தது பயோ பபுளை போன்ற ஒன்றுதான்.

இடை நிறுத்தம்

இடை நிறுத்தம்

விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக மே 14, 16, 18 என மூன்று முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நான், மயங்க் அகர்வால், பயிற்சியாளர்கள், பிசியோதரபிஸ்ட் ஆகியோருடன் விமானம் கிளம்பியது. பின்னர் மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜ்-ஐ அழைத்து செல்வதற்காக விமானம் ஐதராபாத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கு மித்தாலியுடன் சேர்ந்து இந்திய வீரர் கே.எஸ்.பாரத்தும் விமானம் ஏறினார்.

ஒன்றரை மணி நேர காத்திருப்பு

ஒன்றரை மணி நேர காத்திருப்பு

2 மணிக்கு சென்னையில் புறப்பட்ட விமானம் மாலை 6 மணிக்கு மும்பை சென்றடைந்தது. ஆனால் அங்கு சென்ற பிறகும் நாங்கள் நீண்ட நேரம் விமானத்திலேயே இருந்தோம். ஏனென்றால் எங்களை ஏற்றி செல்ல வந்த பேருந்து, கடும் மழைப்பொழிவு காரணமாக ஓடுதளத்திலேயே சிக்கிக்கொண்டது. பேருந்து ஓட்டுநர் பபுளில் இருந்திருக்க வேண்டும். அதே போல் பேருந்து சானிடைஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த சிக்கலால் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக விமானத்திற்கு உள்ளேயே சிக்கியிருந்தோம். அதன் பிறகு தான் வேறு பேருந்து வந்து எங்களை ஹோட்டலுக்கு அழைத்து சென்றது என அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Thursday, May 27, 2021, 21:22 [IST]
Other articles published on May 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+