Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினுக்கே டஃப் கொடுக்கும் அஸ்வின்..பிரமாண்ட சாதனை நெருங்கியது..பின்னுக்கு தள்ளப்பட்ட ஜாம்பவான்கள்

மும்பை: வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சச்சின் படைத்த அட்டகாச சாதனைக்கு அருகில் சென்றுவிட்டார்.

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி 2 - 0 என ஒயிட் வாஷ் செய்தது.

வெற்றியாளரை தீர்மானித்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்புக்கு சென்றுவிட்ட சூழலில் காப்பாற்றிக்கொண்டு வந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான்.

அஸ்வின் பேட்டிங்

அஸ்வின் பேட்டிங்

பேட்டிங்கில் முக்கியமான 42 ரன்களும், பவுலிங்கில் 6 விக்கெட்களையும் அந்த போட்டியில் அவர் எடுத்திருந்தார். லோயர் ஆர்டரில் களமிறங்கி மீண்டும் ஒருமுறை இந்திய அணியை காப்பாற்றிய அஸ்வினுக்கு ஆட்ட நாயகன் விருதை வழங்கி கவுரவித்தனர். இதன் மூலம் பிரமாண்ட சாதனையை அவர் படைத்திருக்கிறார்.

அட்டகாச சாதனை

அட்டகாச சாதனை

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் பெறும் 9வது ஆட்ட நாயகன் விருது இதுவாகும். இதே போல தொடர் நாயகன் விருதை 9 முறை பெற்றிருக்கிறார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனி நபர் விருதை அதிக முறை பெற்ற இந்திய வீரர்களின் பட்டியலில் ராகுல் டிராவிட், சேவாக், கும்ப்ளே ஆகியோரை முந்தி 2வது இடத்தை பிடித்திருக்கிறார். முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் 19 விருதுகளுடன் இருக்கிறார்.

முதலிடம்

முதலிடம்

இதே போல அதிக முறை தொடர் நாயகன் விருதை பெற்றவர்கள் பட்டியலிலும் அஸ்வின் முதலிடத்தில் இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 5 முறை தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளார். அனில் கும்ப்ளே 4 முறையும், ராகுல் டிராவிட் 4 முறையும் தொடர் நாயகன் விருதை பெற்று, அடுத்தடுத்த வரிசைகளில் இருக்கின்றனர்.

இந்தியாவின் காப்பான்

இந்தியாவின் காப்பான்

இந்திய அணியின் ரட்சகனாக அஸ்வின் தற்போது மாறி வருகிறார். உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்று தந்ததில் இருந்து தற்போது வரை அவரின் இன்னிங்ஸ் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்டிலும் அஸ்வினின் இன்னிங்ஸ் இந்தியாவின் ஸ்கோரை நல்ல நிலைக்கு கொண்டு சென்றது.

Story first published: Monday, December 26, 2022, 19:41 [IST]
Other articles published on Dec 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+